உங்களுடைய விசுவாசத்தை ஊக்குவித்து, உங்களுடைய ஆவியைப் புதுப்பிக்கும் மேற்கோள்களின் ஒரு தொகுப்பு சுகமாகுதலைக் குறித்த சிந்தனைகள் Healing Thoughts மகத்தான தீர்க்கதரிசியாகிய வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்கள் அளித்த செய்திகளிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் சுகமாகுதலைக் குறித்த சிந்தனைகள் தேவனோடு சஞ்சரிக்க வேண்டுமானால், இனிமையாய் தரித்திருங்கள். தேவன் இரக்கமுள்ளவர். தேவனோடு தரித்திருக்க வேண்டுமானால் அன்புடன் தரித்திருங்கள். தேவன் அன்புள்ளவர். சாந்தமுடன் தரித்திருங்கள்... தரித்திருங்கள். தன்னைத் தானே ஒருபோதும் திருப்திபடுத்திக் கொள்ளாதிருங்கள். எப்போதும் அவரையே சார்ந்திருங்கள். ஒருபோதும் உங்கள் சொந்த சிந்தையைப் பயன்படுத்தாதிருங்கள். அவருடைய எண் ணங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய எண்ணங் களே உங்களுடைய எண்ணங்களாக இருக்கட்டும். அவைகள் உங்கள் மாமிச சிந்தையில் ஏற்றுக் கொண்டு, அவைகளையே திரும்பத் திரும்பக் கூறுங்கள், எவ்வாறெனில், “ஒ, தேவனே, என்னுடைய எல்லா சந்தேகங்களையும் நீக்கிப் போடும், என்னு டைய எண்ணங்கள் எல்லாம் உம்முடையவைகளாக இருக்கட்டும்” என்று கூறுங்கள். வியாதியஸ்தர்களாயிருக்கிற ஜனங்களே, நாம் பேசுவது போலவே கிரியை செய்யுங்கள். அவைகளை வெளியே எடுத்துப் போடுங்கள், வியாதியைப் பற்றிய எண்ணங்களை தூக்கி எறிந்து போடுங்கள். தேவனுடைய சுகமாக்கும் எண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவைகள் அனைத்தும் உங்களுடைய எண்ணங் களாக இருக்கட்டும். இந்தக் காரியங்களைக் குறித்து சிந்தி யுங்கள், புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஆவிக்குரிய புத்திர சுவிகாரம், 56-0923, பத்தி எண் E-26 சுகம் பெறுவதற்காக ஏறெடுக்கப்படும் ஒருஜெபம் உங்களிடத்தில் என்ன தவறுகள் இருந்தாலும் சரி, இப்போது சுகத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நேரம். நான் ஏறெடுக்கிற இந்த ஜெபத்தை, எனக்குப் பின்னால் நீங்களும் ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; நான் என்ன சொல்லுகிறேனோ, அதையே நீங்களும் சொல்லுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, வானங்களையும், பூமி யையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ் வொரு நல்ல ஈவுகளை அருளுகிறவரே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக எனக்கு இரக்கத்தை அனுப்பும். ஆவியானவரின் கிரியைகள் மூலமாக பிரசங்கிக்கப்பட்ட வார்த் தைகள் மூலமாக, இப்போது விசுவாசிக்கிறேன், கிறிஸ்து இங்கு பிரசன்னராகியிருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். இப் போது அவரை என்னுடைய சுகமாக்குகிறவராக ஏற்றுக்கொள் கிறேன். கர்த்தாவே, நான் ஜீவிக்கிற வரையிலும் உமக்குச் சேவை செய்வேன். நான் உமக்கு வாக்குப்பிரமாணம் செய்கிறேன், இந்த இரவிலிருந்து, நான் என்னுடைய சுகத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிறேன், ஏனென்றால் நான் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். உம்முடைய நேச அன்பு, 58-0228, பத்தி எண் E-66 தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதும், அவர் சொல்லுகிற (அவருடைய வார்த்தையில்) அவரைப் பிடித்துக் கொள்வதும், அது எவ்வளவு சுலபமானது. அது எளிமையா யிருக்கவில்லையா? சற்றே அவரை நேசியுங்கள், அவரை நீங்கள் நேசித்தால், தேவன் (உங்களில்) விசுவாசத்தை சிருஷ்டிக்கும் படியாக உங்கள் இருதயத்தில் அவரை நேசியுங்கள். கன்மலையைப் பார்த்து பேசு, 53-0512, பத்தி எண் E-14 பயணத்திற்காக ஆயத்தப்படுதல் கிறிஸ்து இயேசுவில் நீங்கள் ஊன்றப்படும்போது, பூமியில் சஞ்சரிப்பதற்கு உங்களுக்குத் தேவையானது அனைத்தும், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, உங்கள் வசமாகி விடும். அதற்காக நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் பருகிக் கொண்டே, பருகிக் கொண்டே இருக்க வேண்டும். உந்தித் தள்ளிக் கொண்டே, உந்தித்தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும். இனியும் பருக முடியாது என்ற நிலை வரும் வரைக்கும் பருகிக் கொண்டேயிருங்கள். உங்களுக்குத் தெய்வீக சுகமளித்தல் வேண்டுமானால், தேவனுடைய வார்த்தைக்குச் சென்று, பூரண சுகமடையும் வரை வார்த்தையைப் பருகுங்கள். உங்களுக்குத் தேவன் அதிக அதிகமாக வேண்டுமானால், பருகிக் கொண்டும், உந்தித் தள்ளிக் கொண்டுமிருங்கள். கிறிஸ்து வற்றாத ஜீவ ஊற்றாயிருக்கிறார். அவருக்குள் நீங்கள் ஊன்றப்படுவீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் ஒரே ஒரு காரியம் தான். அவருடைய நல்ல ஈவுகளைப் பருகுங்கள். இந்தப் பூமியின் யாத்திரையில் உங்களுக்கு என்ன என்ன தேவையோ அவை களை இழுத்துக் கொள்ளுங்கள். அது எப்போதும் பருகிக் கொண்டிருப்பதும் சமாதானத்துடன் தாபரிப்பதாகும். அது நீங்கள் எதற்காக போராடுகின்றீர்களோ, அதை இழுப்பதற்காக கடும் முயற்சி செய்கிறீர்களோ அதைப் பொறுத்ததல்ல. அவைகளை நீங்கள் செய்யும் போது, நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிற அந்த முக்கியமான நோக்கத்தை தோற்கடிக்கிறீர்கள். உள்திரை, 56-0121, பத்தி எண் E-25 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். (சங்கீதம் 62:5) முடிந்துவிட்ட கிரியை ஓ, தெய்வீக சுகமளித்தல் என்பது குலமரபு சின்னங்கள் செதுக்கியுள்ள ஒரு கம்பம் அல்ல; அல்லது அது ஒரு ஏமாற்று வித்தையும் அல்ல. அது தெய்வீக சத்தியம், தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது, பரிசுத்த ஆவியினால் உறுதிப்படுத்தப்பட்டதாகும். அது எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும், ஜனங்களுக்கும், கொள்கைகளுக்கும், நிறங்களுக்கும் உட்பட்ட தல்ல. இரட்சிப்பு எவ்வாறு எல்லோருக்கும் சொந்தமோ, அது போல, தெய்வீக சுகமளித்தலும் விரும்புகிற யாவருக்கும் உரியது. அது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட கிரியையாகும், கர்த்தரா கிய இயேசுவின் கொடூரமான பாடுகளிலும், அவருடைய ஜெயமான உயிர்த்தெழுதலிலும் நாம் கொண்டுள்ள விசுவாசத் தின் மூலம் நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம். சாலமோனைக் காட்டிலும் பெரியவர் இங்கே இருக்கிறார், 57-0228, பத்தி எண் E-5 விசுவாசம் என்பது ஒரு புராணக் கதையல்ல; அது ஏதோ உங்கள் கற்பனையில் உண்டானதுமல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, நம்முடைய இருதயத்தை தேவன் திறப்பாராக. விசுவாசம் சாதகமாகவே இருக்கும். இங்கே, இந்த கண்ணாடி இருப்பது எவ்வளவு நிச்சயமோ, இந்த புஸ்தகம் இங்கிருப்பது எவ்வளவு நிச்சயமோ நிச்சயமோ அதுபோல விசுவாசம் என்பதும் ஒரு நம்பப்படுகிற பொருளாகும். “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளில் உறுதியும், நிச்சயமுமாயிருக்கிறது...” ஒ, அவருடைய பரிசுத்த நாமம் ஆசீர் வதிக்கப்படுவதாக. அது காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக் கிறது, ஆனால் அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். தேவன் அதை பேசும் போது, தேவன் அவருடைய வார்த்தையை காக்க வேண்டும். எல்லா வாக்குத்தத்தங்களையும், உங்களுடையது என்று ஏற்றுக் கொள்ளும்போது, அவ்வாக்குத்தத்தங்கள் உங்கள் வசமாகி விடுகிறது. இந்தக் கன்மலையைப் பார்த்து பேசு, 57-1215,பத்தி எண் E-12 செயல்படுத்துதல் என்னுடைய நண்பர்களே, இதைச் சொல்வதற்கு நான் வாஞ்சிக்கிறேன். நான் சுகமளிப்பவன் அல்ல. நான் ஜனங்களை சுகமாக்க முடியாது. எந்த மனிதனோ, எந்த மருத்துவரோ அல்லது மருத்துவமனையோ அல்லது மருந்துகளோ, ஜனங்களை சுகப்படுத்தும் என்பதை நான் விசுவாசிப்பதில்லை. சுகமாக்குதல் என்பது தேவனிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன். இப்போது, ஒரு மருத்துவர் ஒரு அடைப்பை நீக்கிப் போடலாம், முறிந்த எலும்பைப் போருத்தலாம், ஒரு பல்லைப் பிடுங்கிப் போடலாம், ஒரு கட்டியை எடுத்துப் போடலாம். ஆனால், அது சுகப்படுத்துவதில்லை. அது சற்றே அந்தத் தடையை நீக்கிப் போடுவதாகும். தேவனே சுகமாக்குகிறார். சுகமாக்குதல் என்பது சிருஷ்டிப்பாகும். அது சிருஷ்டித்து மறுபடியும் கட்டுகிறது. ஒரு மருந்தும் உங்கள் சரீரத்தைத் திரும்பவும் கட்டாது. தேவன் ஒருவர் மாத்திரமே திரும்பக் கட்டமுடியும். அது சரியா? தேவன்; அவரே சுகமாக்குகிறவர். அதன்பிறகு இயேசு வந்தார், 57-0302, பத்தி எண் E-33 இன்று இரவில் அமெரிக்காவில் நமக்கு என்ன தேவையாயிருக்கிறது, இன்று இரவில் இங்கே இந்தக் கூடாரத்தில் நமக்கு என்ன தேவைப்படுகிறது என்று நான் உங்களிடம் கூறுகிறேன். மருத்துவராகிய இயேசு வரட்டும், வந்து நம்முடைய விசுவாசத்தின் செயல்பாட்டில் அறுவை சிகிச்சை செய்யட்டும். மருத்துவர், நீங்கள் சிறிய குடல் வால்வைப் பெற்றிருக்கிறீர்கள் என்று கூறுவார், “அது எல்லாமும் விஷம் நிறைந்திருக்கிறது, அது வெளியே வர வேண்டும். நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள், இதைப் பெற்றிருக்கிறீர்கள் அல்லது மற்றவைகள் யாவும் சரியல்ல; அது வெளியே அகற்றப்பட வேண்டும்.” நல்லது, அவர் அதை அகற்றி விடுகிறார், ஆகவே மற்ற உங்களுடைய உறுப்புகள் யாவும் சரியாய் இயங்க வேண்டும். இன்றிரவில் நம்முடைய விசுவாசத்திற்கு என்ன பாதகம் ஏறபட்டது. தேவன் அவருடைய செயல்படுத்தும் வார்த்தையை எடுப்பதற்கு அனுமதிக்கப் பயப்படு கிறோம். அவருடைய கத்தியை எடுத்து, அது இருபுறமும் கருக் குள்ள பட்டயத்தைக் காட்டிலும் கூர்மையானது, அவர் நம்மில் அறுவை சிகிட்சை செய்யட்டும். அவர் வந்து நமக்கிருக்கிற சிறிய, ஆணும் பெண்ணுமாய் பாடிக் கொண்டே ஆடுதல், மற்றும் சுற்றியிருக்கிற மோசம் போக்கும் காரியங்கள் தவறானவை என்று நம்மிடம் சொல்லட்டும், நம்மை விட்டு அகற்றிப் போடட்டும். ஒவ்வொரு நிழல்களையும் அகற்ற வேண்டியவர்களாயிருக்கிறோம்; தேவனுடைய நித்திய வாக்குத்தத்தத்தை நோக்கிப் படகைச் செலுத்துவோம். ஓ, நாம் அதைச் செய்வோமானால், இயேசு நம் முடைய விசுவாசத்தின் மீது கிரியை செய்து, எல்லா சந்தே கங்களையும், எல்லா பயத்தையும், எல்லா கவலைகளையும், எல்லா பாவங்களையும், அதற்குள் இருக்கிற எல்லாவற்றையும் அகற்றிப் போடுவார். மேலும், நம்முடைய விசுவாசம் அதில் தெளிவாக செயல்படும்போது, நாம் ஒரு புது சிருஷ்டியாக வெளி வருவோம். அப்போது நாம் வித்தியாசமானவர்களாகக் காணப் படுவோம். ஒரு அறுவை சிகிட்சை நமக்குத் தேவைப்படுகிறது. விசுவாசமே நமது ஜெயம், 58-1004, பத்தி எண் E-35 கோழைகளுக்கு இடமில்லை நம்மை சோதிப்பதை அவர் நேசிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய விசுவாசத்தின் கிரியை என்ன வாக இருக்கிறது என்பதைக் காண வாஞ்சிக்கிறார். உங்களுக்கு அது தெரியுமா? நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதைக் வாஞ்சிக்கிறார். "ஓ, கர்த்தாவே, நான் உம்மை விசுவா சிக்கிறேன்; நீர் என்னுடைய இரட்சகராக இருக்கிறீர். நீர் சுகமாக்குகிறவர் என்று நான் விசுவாசிக்கிறேன்; நீரே பரிசுத்த ஆவியை அருளிச் செய்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன்; எனக்குத் தேவைப்படும் பொருள்களை கொடுக்கிறவர் நீர் என்று விசுவாசிக்கிறேன். அவைகளைக் கொடுக்கிற தேவன் நீரே” என்று நீங்கள் சொல்லும் போது. அதன்பிறகு, நீங்கள், உங்களுடைய எல்லா பாவங்களையும் அறிக்கை செய்து, நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தேவனுக்கு வாக்குக் கொடுக்கும் போது, அவர் உங்களுக்கு சுகத்தை அளிப்பாரானால், அதன் பிறகு அது சம்பவிக்கவில்லையென்றால், ஒரு கோழையைப் போல எங்கோ ஓடுகிறாய். தேவன் அதைப் பயன்படுத்த மாட்டார். உன்னைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு ஒரு வழியும் இல்லை. உங்களுக்குப் பதிலளிக்க அவருக்கு ஒரு வழியும் இல்லை, ஏனென்றால், விசுவாசத்தினாலே மாத்திரம் பதிலளிக்கிறவரா யிருக்கிறார். பின் சடுதியில் நீங்கள் அங்கிருந்து சென்று விடுகி றீர்கள். அவரால் பதிலளிக்க முடியாது. ஆனால், உண்மையான, நிஜமான விசுவாசம் அங்கு நிலைத்து நிலைத்து நின்று, தேவன் இருக்கிறார் என்னும் நிச்சயத்தை உடையதாய் இருக்கும். அவர் இருக்கிறார் என்னும் நிச்சயம் உடையவர்களாய் இருங்கள். தேவனைக் குறித்த நிச்சயம் உடையவர்களாயிருங்கள், 59-0125, பத்தி எண் 46 தேவன் ஒரு கோழையல்ல. உங்களுடைய சுகத்தைக் குறித்தோ அல்லது உங்களுடைய இரட்சிப்பைக் குறித்தோ சாட்சி கூறப் பயப்படும் கோழைகளை அவரால் பயன்படுத்த முடியாது; அவர் உன்னைப் பயன்படுத்த முடியாது; நீ ஒன்றுக்கும் உதவாத வன். பாருங்கள்? பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது போதும், 56-0422, பத்தி எண் E-56 நீங்கள் காண்கிறது என்ன? இப்போது உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள். நீங்கள் எதைக் காண்கிறீர்கள், உங்கள் பகைஞனையா அல்லது உங்களுடைய இரட்சகரைப் பார்க்கிறீர்களா? இந்தக் காலை வேளையில் எதைக் காண்கிறீர்கள்? நீங்கள் வியாதியாயிருந்தால், உங்கள் மருத்துவர் கூறுகிறார்: “நீங்கள் சுகமடைய முடியாது” என்று, சிலுவையை நோக்கி உங்கள் கண்களை ஏறெடுங்கள், அங்கே அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானோம். மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதில் கவனம் கொள்ளாதீர்கள்; அவர் விஞ்ஞா னத்தின் மூலமாக கிரியை செய்கிறார். விசுவாசம் ஆவியோடும் தேவனோடும் உள்ள பரிமாணத்தில் கிரியை செய்கிறது. விசுவாசத்தினாலே மோசே, 58-0720 M, பத்தி எண் E-51 அது எவ்வளவு மந்தாரமாக காணப்பட்டாலும் சரி... “நல்லது, நான் இன்னுமாய் வியாதியுடையவன் போலக் காணப்படுகிறேன்” என்று கூறுகிறீர்கள். அது ஒன்றுமல்ல... அது தூதர்களுடைய இறக்கைகள் ஒன்று சேருவதாகும். அவ்வளவே. அது தேவன் ஆசீர்வாதத்தின் வடிவில் தோன்றுவதாகும். அது உங்களுக்கு மந்தாரமாய்க் காணப்படுகிறது. அதை உங்களுக்கு அருகில் இழுங்கள், அதை மறுபடியும் கவனியுங்கள். தேவன் அங்கு நின்று கொண்டு, அவருடைய வார்த்தையைக் காக்கிறாரா இல்லையா எனபதைப் பாருங்கள். தேவனைக் குறித்த நிச்சயம் உடையவர்களாயிருங்கள், 59-0125, பத்தி எண் 140 சோதனை தண்ணீர் சூழ்ந்து படகு கவிழும் நிலை உண்டானது, அதற்குப் பிறகு, இயேசு பேசினார், “இது நான் தான், பயப்படாதிருங்கள்” என்று கூறினார். பேதுரு, "அது நீரேயானால், கர்த்தாவே, சிறிய சோத னையை எனக்குக் கொடும்” என்று கேட்டார். கேளுங்கள், அப் போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஆகவே அவர், அவனுக்கு சோதனையைக் கொடுத்தார். அதைச் செய்வதற்கு அவருக்குள் அவர் முயற்சி செய்த போது, தோல்வியைக் கண்டார், மற்ற ஒவ்வொரு மனிதனும் தோல்வியடைவர். அவர் இயேசுவையே நோக்கிப்பார்த்துக் கொண்டிருந்த கண்களைத் திருப்பி, அலைகள் எவ்வளவு பெரிதாய் இருக்கின்றன என்று பார்க்கத் தொடங்கினார். அந்த அலைகள் எதிராக இருந்ததை அவர் பார்த்த போது, அவர் மூழ்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மனிதனும், அவனுடைய வியாதிக்காக ஜெபித்த பிறகு, அவன் தன்னுடைய வியாதியின் வேதனைகளை நோக்கிப் பார்ப்பானேயானால், அவன் மூழ்கிப் போவது நிச்சயம். உங்களுடைய பாடுகளையே நோக்கிப் பார்க்க வேண்டி யதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல், வாக்குக் கொடுக்கிறவர் மேல் உங்கள் கண்களை வையுங்கள். அவருடைய வார்த்தையில் உங்கள் கண்களைப் பதியுங்கள். அவரே ஒருவரே வாக்குப் பண்ணினவர். அதை நிறைவேற்றுவதற்காக, அவ்வாக்குத் தத்தங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார். அவருடைய உள்ளங்கையில் வைத்திருக்கிறார். அவருடைய இருதயத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அவருடைய வார்த்தை சத்தியமாக இருக்க வேண்டும். உங்களுடைய வியாதியிலிருந்தும், உங்களுடைய பாடு களிலிருந்தும் உங்களுடைய சிந்தையை, (நினைவை) எடுத்துப் போடுங்கள். உங்களுடைய கண்களை இயேசுவின் மேல் வையுங்கள். ஒரு இரகசிய விசுவாசியாகிய யவீரு, 55-0604,பத்தி எண் E-38 சாட்சி கொடுங்கள் நீங்கள் அதை விசுவாசிப்பதாகவும், சுகமடைந்து விட்டதாகவும் சாட்சி கூறி முன்னேறிச் செல்லுங்கள். அப்போது நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். நல்லது, அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இரட்சிக்கப்பட்டதாக சாட்சி கூறும் போது, அது நீதிக்கு என்று கிரியை செய்கிறது. சுகமடைந்து விட்டதாக சாட்சி கொடுங்கள். அது சுகத்திற்கான கிரியையை நடப்பிக்கும். தேவன் அதை அருளிச் செய்வார். எதிர்பார்ப்பு, 50-0405, பத்தி எண் E-62 ஆனால், இப்போது, நீங்கள் செய்யவேண்டுவதெல்லாம், அதை விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்போது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். பாருங்கள், எதை பொருள் கொண்டு பேசுகிறேன்? இப்போது, இதைக் காட்டிலும் மேலான காரியம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஏனென்றால், உங்கள் சுகத்திற்கான கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று. இந்தப் பிற்பகல் வேளையிலேயே உங்களால் அதைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் விசுவாசிக்கும்போது, இப்போதே, இந்த நிமிஷத்திலேயே அதைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களு டைய விசுவாசம் தேவனுடைய தேவையை சந்திக்கும்போது, உங்களுடைய வியாதிக்காக கிறிஸ்து மரித்தார் என்று விசுவா சிக்க வேண்டும். உங்களுடைய பாவங்களுக்காக அவர் மரித்த போது, (அவர் உங்களுடைய பாவங்களுக்காக கல்வாரியில் மரித்தார்), அந்த அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளும்போது, அந்த கணமே, தேவனுடைய பார்வையில் நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். பாருங்கள்? அதன்பிறகு அதை விசுவா சித்தவர்களாய் தொடர்ந்து சாட்சி கூறிக்கொண்டேயிருங்கள். நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை... நாம்... நீங்கள் காணாத காரியங்களைக் குறித்து சாட்சி கொடுங்கள். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளில் உறுதியும், காணப்படா தவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நாம் காணக் கூடாதவை களை நோக்கிப் பார்க்கிறோம். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா?, 50-0716, பத்தி எண் E-13 இயேசுவை அணுகுதல் சில ஜனங்கள் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டு சுகமடைந்தார்கள். மற்றவர்கள் அவருடைய கன்னத்தில் அடித் தார்கள், தடிகளை வைத்து அவருடைய தலையில் அடித்தார்கள், அவருடைய முகத்தில் துப்பினார்கள், ஒரு வல்லமையையும் ஒரு போதும் அவர்கள் உணரவில்லை. அவர்கள் அவரை அணுகிய முறை அவ்விதமாக இருந்தது. எத்தகைய மனப்பான்மையோடு நீங்கள் உள்ளே வந்தீர்களோ அதைப் பொறுத்தது. உதவியைப் பெறுவதற்காக, அதை விசுவாசித்தவர்களாய் நீங்கள் வந்திருப்பீர் களேயானால், அந்த சரியான நபராகிய இயேசு கிறிஸ்துவிடம் வருகிறீர்கள் என்ற நம்பிக்கையைப் பெறுகிறீர்கள். அவரை அணுகுவதற்கு அவர் வகுத்த வழியில் வந்திருப்பீர்களேயானால், பயபக்தியோடு நீங்கள் வந்திருப்பீர்களேயானால், ஏதோவொன் றைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். “நல்லது, நான் போய் அவரைத் தொட்டு, அது எனக்கு உதவி செய்கிறதா என்று பார்ப்பேன்” என்ற (எண்ணத்துடன்) நீங்கள் வந்தால், அது எந்த நன்மையும் பயக்காது. பாருங்கள்? அது உங்களுடைய — அது நீங்கள் தேவனுடைய தெய்வீக நபரை அணுகுவதாகும். அதைத் தான் அது செய்கிறது. வெண்கல சர்ப்பத்தைப் போல. ஏன், சர்ப்பம் தனக்குள் எந்த வல்லமையையும் பெற்றிருக்கவில்லை; அது ஒரு வெண் கலத் துண்டு மட்டுமே. அதை அவர்கள் எகிப்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். அந்தக் கம்பம் தனக்குள் எந்த வல்லமையையும் கொண்டிருக்கவில்லை. ஒரு சிறு துளி கூட கிடையாது. ஆனால் தேவன் என்ன செய்யக் கூறினாரோ, அதைச் செய்து கீழ்ப்படிவதாகும். வல்லமையை எது கொண்டு வந்தது. எது வல்லமையைக் கொண்டு வந்தது. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிதலே அந்த வல்லமையைக் கொண்டு வந்தது. இந்த இரவு வேளையிலும் அதே காரியம் தான். குருடனான பர்த்திமேயு, 54-0402, பத்தி எண் E-9 மனப்பான்மை தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தத்தின் பேரிலுள்ள உங்கள் சரியான மனப்பான்மையானது, எந்த ஒரு வாக்குத்தத் தத்தையும் நிறைவேறுதலுக்குக் கொண்டு வரும். இப்போது, ஒரு வேளை நீங்கள் அதை நம்பாமல் போகலாம். “நல்லது, என்னுடைய விசுவாசம் பலவீனம் உடையது” என்று நீங்கள் கூறலாம். நான் அதை அறிக்கை செய்ய மாட் டேன். பாருங்கள்? அதைப் பிசாசு அறிந்து விட அனுமதிக்கா தீர்கள். “நான் நல்ல விசுவாசத்தைப் பெற்றுள்ளேன், என்னுடைய முழு இருதயத்தோடும் தேவனை விசுவாசிக்கிறேன்” என்று எப்போதும் கூறுங்கள். பாருங்கள்? பிசாசைக் குறித்து சாட்சி கொடாதிருங்கள். உங்களுடைய சுகமாக்குகிறவராக அவரை ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் சுகவீனனாகவோ அல்லது முடமானவ னாகவோ என்று ஒருபோதும் செயல்படாதீர்கள். நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று விசுவாசிக்க வேண்டும். அவரை அவருடைய வார்த்தையில் எடுக்க வேண்டும். அதன்பிறகு, கர்த்தருடைய பட்சத்தில் அது முடிந்து போன காரியம், அது உங்களை சார்ந் ததல்ல. பாருங்கள்? நீங்கள்... எந்த மட்டும் தேவனை அவரு டைய வார்த்தையில் எடுக்கிறீர்களோ, அதன்பிறகு, வார்த்தை என்ன செய்யும் என்று வாக்குப்பண்ணப்பட்டுள்ளதோ அதை நிறைவேற்றும். அது சரியா? இப்போது, விசுவாசம் கொள்ளுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்புங்கள். வேளை வந்தது, 51-0415 E, பத்தி எண் E-17 இப்படிப்பட்ட நெருக்கங்கள் செய்யப்பட்டது அல்லது கொண்டுவரப்பட்டது - அதை எப்படிப்பட்ட மனப்பான்மையுடன் எடுத்துக் கொள்வீர்கள் என்பதைப் பார்ப்பதற்காக கொண்டு வரப்பட்டது. பாருங்கள்? அது தேவன், அதை நிரூபிக்கும் நிலை யோடு இருப்பதாகும். பூமியானது அத்தகையதே, அது நிரூபிக் கும் வயல். அங்கே தான் அவர் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட முயற்சிக்கிறார். எபிரெயர் – நான்காவது அதிகாரம், 57-0901 E, பத்தி எண் 33 ஜெபவரிசையில் அன்பான சகோதரியே, எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது வரைக்கும் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ள வில்லை. உங்களை இரண்டு பிரச்சனைகள் தொல்லைபடுத்து கின்றன. இன்னொன்று உங்களுக்குள் வருவதை நான் பார்க் கிறேன். என்னை அனுமதியுங்கள்... ஆகவே... நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்கிறீர்கள், நீங்கள் அதைச் செய்கிறீர்கள் இல்லையா? உங்களையே நீங்கள் அழுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்கிறீர்கள் இல்லையா? ஆனால் அது காரியமல்ல. அதை நீங்களே சரிப்படுத்திக் கொள்ளுங்கள். சகோதரியே, "நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். உங்களால் அதைச் செய்யக் கூடும் என்பதல்ல அது; அது வெறுமனே எளிமையான விசுவாசத்தால்... சற்றே... என்னுடைய சட்டை என்ன வண்ணத்தில் இருக்கிறது? வெள்ளை நிறம். இப்போது நீங்கள் பார்க்கும் புலனைப் பெற் றுள்ளீர்கள், அது, அதை வெள்ளை நிறம் என்று கூறுகிறது, இல் லையா? இப்போது, உங்களுடைய விசுவாசம், “நான் இப்போதே சுகமடையப் போகிறேன்” என்று உங்கள் விசுவாசம் கூறுமானால், அதுபோலத்தான் இதுவும். உங்களுடைய பார்க்கும் திறன், இந்தச் சட்டையானது வெள்ளை நிறம் என்று கூறுவது போலத்தான் இதுவும். அது முடிந்து போன காரியம். உங்களுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கிறீர்களா? அது எனக்கு சொல்லப்பட்டபடியே நடக்கும், 50-0818, பத்தி எண் E-55 இப்பொழுது, நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்றால், ஒன்றை நினைவு கூருங்கள், யாரோ ஒருவர் தெய்வீக சுக மளித்தலின் வரத்தைப் பெற்றுள்ளார், அந்த வரமே உங்களைச் சுகப்படுத்துகிறது என்று எண்ணாதிருங்கள். தெய்வீக சுகமளித்த லின் மூலமாக நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்றால், அத் தகைய தெய்வீக சுகமளித்தலின் வரத்தை நீங்களே பெற்றிருக்கி றீர்கள். அது கிறிஸ்துவுக்குள் உங்களில் இருக்கும் விசுவாசமா யிருக்கிறது; இந்த மனிதன் அல்ல, அல்லது வேறு எந்த மனிதனாலும் அல்ல. அது தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவுக்குள் இருக்கிற உங்கள் சொந்த விசுவாசம். எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?, 51-0719, பத்தி எண் E-24 விதைகள் விதைப்பது நீங்கள் விதையை விதைக்கும் போது, ஒவ்வொரு நாள் காலையிலும், அது முளைத்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு தோண்டிப் பார்ப்பதில்லை. அவ்வாறு நீங்கள் செய்வீர்கள் என் றால், உங்களுடைய விதை ஒருபோதும் முளைத்து வராது. நீங்கள் அதை ஊன்ற வேண்டும், மண்ணுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும், அது தனித்திருக்கட்டும். அது இயற்கைக்கும் அந்த வித்துக்கும் உரியது, தேவன் தண்ணீர் பாய்ச்சுகிறார், அது பலன் அளிப்பதைப் பார்க்கிறார். அது உண்மையா? ஆகவே, தேவனுடைய வார்த்தையோடும் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அது தான். நல்ல எண்ணத்தோடு உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்கனவே உரம் இடப்பட்டாயிற்று, எல்லா ஊர்வனவைகள், கற்பாறை நிலங்கள், கல்போன்ற சந்தேகங்கள் எடுத்துப் போடப்பட்டு விட்டன. நல்ல வளமான விசுவாசம் என்னும் மண்ணில், அதை விசுவாசியுங்கள், அதை தேவனிடத்தில் விட்டு விடுங்கள், அங்கிருந்து சென்று விடுங்கள், தேவன் உங்களுக்கு என்ன வாக்குப் பண்ணினாரோ அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று சாட்சி கொடுத்துக் கொண்டேயிருங்கள். உங்களுடைய அறிக்கையின் பேரில், அவர் பிரதான ஆசாரியனாக இருக்கிறார். அவர் செய்து முடித்து விட்டார் என்று நீங்கள் கூறும் அறிக்கையில் எல்லாவற்றையும் சரிப்படுத்துகிறார். அதுதான் சுவிசேஷம். ஜீவனுள்ள தேவனுடைய சபை, 51-0727, பத்தி எண் E-17 சாத்தானுடைய வஞ்சகம் சுகமாகுதல் என்பது ஏற்கனவே உங்களுடையதா யிருக்கிறது. அப்படியானால், அவ்வியாதி தொடரும் என்றால், அது பாவத்தின் காரணமாக இருக்கும்: உங்களுடைய வாழ்க் கையில் ஏதோ சரியல்லாத காரியத்தைச் செய்து கொண்டிருக்கலாம், அல்லது வேறு ஏதோ சில பிசாசுகள் உங்களைத் தங்களுடைய ஆதிக்கத்தில் வைத்துள்ளன, அது உங்களை விசுவாசிக்க அனுமதிக்காது. இப்போது, உங்களுக்குத் தெரியுமா, அது அவ்வாறு இல்லையென்றால், "விசுவாசிக்கிறவர்களுக்கு சகலமும் கூடும்” என்று இயேசு சொன்ன காரியமும் தவறாயிருக்கும். அது சரியா? அப்படியானால், அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது; அது தேவனிடத்தில் இல்லை. தேவனை விசுவாசித்தல், 52-0224, பத்தி எண் 225 இப்போது, உங்கள் மீது ஏதோ தொங்கிக் கொண்டிருக் கிறது, பாவம், நீங்கள் அதை அறிக்கை செய்வதில்லை, அந்த மனிதனை நீங்கள் அபிஷேகிக்க கூடும், அவர்களுக்காக ஜெபிக் கக்கூடும், நீங்கள் விரும்புவதையெல்லாம் செய்யக்கூடும், அது... உங்கள் வாழ்க்கையில் உள்ள பாவத்தை அறிக்கை செய்யுமட்டும் சாத்தான் அங்கேயே தரித்திருப்பான். அல்லது சில நேரங்களில், நீங்கள் செய்யாத ஏதோவொன்று, ஏதோவொன்றை செய்யத் தவறியது. ஏதாவது தவறு என்றால் தேவன் அதை வெளிப்படுத் துகிறார். அப்போது அதை நீங்கள் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடைய சுகம் பூரணப்பட்டு விட்டது. இப்போது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?, 53-1106, பத்தி எண் E-9 கொடிய விஷ பாம்புகள்! இப்போது, கூறுங்கள், உங்களில் சிலர் பெண்களா யிருக்கிறீர்கள், நாளைக்கு துரித முகவர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து, “எப்படியிருக்கிறீர்கள், நீங்கள் செல்வி ஜாண் டோ தானே?" என்பார்கள். “ஆம்” என்பீர்கள். “நல்லது, ஏதோ காரியத்திற்காக இங்கே உங்களிடம் வந்திருக்கிறேன்" என்பார்கள். அதை நீங்கள் கவனிக்கிறீர்கள், அது ஒரு பெரிய பெட்டி, அதில் நிறைய கொடிய விஷப்பாம்புகள் இருக்கின்றன. நல்லது, எத்தகைய ஒரு வெகுமதி. அங்கே அவைகளில் உங்கள் பெயர் கட்டப்பட்டிருக்கிறது. "இவைகள் எல்லாம் உங்களுடையது.” அவைகள் உங்களுடையதா? ஒருவகையில் அவைகள் உங்களுடையதுதான். மற்றொரு வகையில் அது உங்களுடைய வைகளல்ல. இப்போது, "நான் அவைகளை விரும்பவில்லை” என்று கூறலாம். “நல்லது, அவைகள் உங்களுடையது தான்; உங்களுடைய பெயர் அதில் இருக்கின்றது.” நல்லது, ஒருவகையில் அவைகள் உங்களுடையது தான், ஆனாலும் அதில் கையெழுத்துப் போடுமட்டும் அது உங்க ளுடையது அல்ல. அதில் நீங்கள் கையெழுத்து போடவில்லை யெனில், அதை அவர் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுடைய எல்லாவிதமான அறிகுறிகளையும் பார்க்க லாம். “அது இங்கே இருக்கிறது; உங்களுடைய புற்றுநோய் இங்கேயிருக்கிறது; இங்கே உங்களுடைய இருதயக் கோளாறு உள்ளது; இங்கே உங்களுடைய முடமான நிலைமை இருக்கிறது” என்று பிசாசு கூறுகிறான். பிசாசு கொண்டு வருகிற எதிலும் கையெழுத்துப் போடாமல் மறுத்து விடுங்கள். அவ்வாறு செய்யும்போது அவன் அதைத் திரும்ப எடுத்துக் கொள்ளவே செய்ய வேண்டும். "அதை நான் பெற்றுக் கொள்ள மறுக்கிறேன். இல்லை, ஐயா. அதை நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்” என்று கூறுங்கள். கர்த்தருடைய நாமத்தில் அவன் அதைத் திரும்ப எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் அதை விசுவாசித்து, அதை அறிக்கை செய்தால், “நான் இயேசு கிறிஸ்துவை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறுங்கள். அப் போது, அங்கே துன்பம் இருக்காது, அல்லது வியாதி உங்க ளுக்குள் தங்கியிருக்க முடியாது. சரியாக அதிலேயே தரித்திருங்கள். ஆனால் முதல் முறையாக நீங்கள் பலவீனம் அடையும் போது, “நல்லது, ஆம், இப்போதும் அது என்னில் இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். அதன்பிறகு, நீங்கள் எங்கேயிருக்கிறீர்களோ அங்கேயே அதை இறக்கி விட்டு விடுங்கள். அதற்காக அதில் கையொப்பம் இடுங்கள், பின்பு அதைத் திரும்ப எடுத்துப் போடுங் கள். "ஆம், திருவாளர் பிசாசு அவர்களே, அதைத் திரும்ப பெற்றுக் கொள்வேன்” என்று கூறுங்கள். ஓ, சகோதரனே. நீங்கள் அங்கேயே தரித்திருங்கள். உங்கள் சரீரத்தில் சுவாசம் இருக்குமட்டும் அங்கேயே தரித்திருங்கள். “அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறேன், அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறேன்” என்று கூறுங்கள். எப்படி உணருகிறீர்கள்? "அதிசயம், அல்லேலூயா.” அதுதான் அது. அது சரியா? அவைகளிலிருந்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பிசாசுக்குக் காட்டுங்கள்; தேவ னுடைய ஆவியினால் நீங்கள் மறுபடியும் பிறந்தீர்கள், ஆகவே அவனுடைய உருவங்களுக்கு முன்பாக பணிய வேண்டிய அவசியம் இல்லை. அங்கேயே தரித்திருந்து, “உன்னுடைய காரி யம் எதுவும் எனக்கு வேண்டாம்" என்று கூறுங்கள். “ஏன், இங்கே உங்களுடைய பெயர் இருக்கிறது, மருத்துவர் சொன்னார்...” “அவர் என்ன கூறினார் என்பதைப் பற்றி அக்கறையில்லை. தேவன் என்ன கூறினார் என்பதை நான் அறிந்திருக் கிறேன். அத்தோடு இங்கிருந்து ஓடி விடு." அது சரியே, அவனை நடத்த வேண்டிய விதம் அதுதான்; அவன் கையிலேயே அதைக் கொடுத்து விடுங்கள். இரண்டாவது அற்புதம், 51-0729 E, பத்தி எண் E-35 முதல் E-36 வரை ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். (யாக்.4:7) அது அதைச் சரிசெய்கிறது இப்போது, உங்களுடைய நோய்களுக்காக இயேசு கிறிஸ்து மரித்தார் என்கிற ஊக்குவித்தலை நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது, அந்த மணி நேரமே உங்களுடைய சுகமா குதல் வந்து விட்டது. அது சரியே. நீங்கள் இயேசு உங்களுடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும் மற்றும் அதை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதையும் பரலோகத்திலிருந்து பெற்றுக் கொள் ளும்போது, அதற்குப் பிறகு உங்களுக்கு எந்த ஜெபமும் தேவை யில்லை. நீங்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். அது சரி செய்யப்படுகிறது. இப்போது, வார்த்தையைப் பிரசங்கிக்கக் கூடும், வார்த் தையை விவரித்துக் கூற முடியும். ஆனால், நீங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஓ, அல்லேலூயா. சகோதரனே, அப்படித்தான் அதன் அக்கினி பற்ற வைக்கப்படுகிறது. அதை – அந்த வெளிப்படுத்தலை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, பார்க்க முடியாத அந்த உலகத்திலிருந்து ஏதோவொன்று நழுவிப் போய் விடுகிறது. எங்கிருந்தோ காணக் கூடாத வாய்க்கால் வழியாக உருண்டோடி உங்கள் ஆத்துமாவுக்குள் வந்து, "இப்போது, நான் அதைக் காண்கிறேன்” என்று கூறுகிறது. உங்கள் கண்கள் பளிச்சிடுகின்றன; தொங்கிக் கொண்டிருந்த உங்கள் உதடுகள், உயர நிமிர்த்தப்பட்டு, சிரிக்கிறது. உங்களுடைய சரீரத்திலுள்ள ஒவ்வொரு தசையும் மகிழ்ந்து களிகூரும். ஏதோவொன்று சம்ப விக்கப் போகிறது. ஏதோ ஒன்று... அப்போது நீங்கள் ஜெப வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் வராது. அங்கேயே அதைப் பெற்றுக் கொண்டீர்கள். சுகமாக்கப்படுவதற்கு தேவனால் அருளப்பட்ட வழி, 54-0719 A, பத்தி எண் E-29 ஒருமுறை உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொள் வீர்களானால், வேறு ஒரு ஜெபவரிசையில் நீங்கள் ஒருபோதும் போக வேண்டியதில்லை. என்றென்றுமாக அதைச் சரிப்படுத்தத் தக்கதாக அனுமதிக்கிறீர்கள். பாருங்கள்? எதிர்பார்த்தல், 51-0930, பத்தி எண் E-64 உண்மையான காரியம் சகோதரனே, புலனால் உணரக்கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த அந்தப் பக்கம் சார்ந்து கொண்டு, தொடங்குங்கள். கவனியுங்கள். ஒவ்வொரு ஏமாற்றுகிறவனும், அவன் நரகத்திற்கு செல்லும்போது, வேட்டை நாயைப் போல எப்படியாக குரைத்து திரிவான். இரத்தம் குடிக்க எப்படியாக வாஞ்சித்தவனாயிருப்பான். அது சரியா? அது உண்மை. பெந்தெகோஸ்தே நாளன்று, பேதுரு ஒரு பிரசங்கம் செய்தான், மூவாயிரம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டனர். இதை உங்களுக்குக் கூறுகிறேன். பிசாசு அவனுடைய படுக்கையை விட்டு நகரக் கூட முடியவில்லை. அது சரிதான். “ஓ, நல்லது, அவர்கள் தனியே இருக்கட்டும்.” பாருங்கள்? அடுத்த நாள் அலங்கார வாசல் என்றழைக்கப்படும் வாசல் வழியாக கடந்து சென்றான். தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதலாய் முடமாயிருந்த ஒரு மனிதனை சுகமாக்கினான். முழு பாதாளமும் அவனுக்கு எதிராக திரும்பியது (அது சரியே), அவரைச் சிறைச்சாலையில் போட்டார்கள். இரவெல்லாம் அங் கேயே வைத்திருந்தார்கள். ஆம், ஐயா. சிறைச்சாலையில் உள் அறையில் வைத்தார்கள். ஏனென்றால் அது அத்தனை தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்தது. பிசாசு, "இப்போது தொடங் கியிருக்கிற இந்த தெய்வீக சுகமளித்தலை அனுமதிக்க மாட் டேன். அவர்கள் அதைச் செய்வார்களானால், உண்மையிலேயே அவர்கள் என்னுடைய அதிகாரத்திற்குக் கீழே இருக்கிற என்னு டைய உடைமைகளை என்னை விட்டு அகற்றி விடுவார்கள்" என்று கூறினான். அது சரியே. “ஏனென்றால், சற்று நேரத்திற்கு சிறிய இறையியல் மூலமாக அவர்களை முட்டாள்களாக்கப் போகிறேன். ஆனால், வெளிப்படும் அந்த உண்மையான காரியத்தை முட்டாளாக்க முடியாது, அது செய்யப்பட்டதை ஜனங்கள் கண்டார்கள்; மற்றக் குழுவினரும் இந்தக் காட்சியைக் காணா தபடி நான் இப்போதே இதை நிறுத்திப் போடுகிறேன்” என்றான். அதன்பிறகு, அவன் ஒருபோதும் அதை நிறுத்தவில்லை. இப்போதும் அவனால் அதைத் தடை செய்ய முடியாது. அது சரியே. தேவனுடைய சுவிசேஷம் அசைந்து, அசைந்து கொண்டேயிருக்கும். பரிசுத்த ஆவியின் நடபடிகள், 54-1219 E, பத்தி எண் 63-66 தேவனுடைய காசோலை புத்தகம் அவருடைய இராஜ்ஜியத்தில் பெற்றிருக்கிற எல்லாமும் நமக்குச் சொந்தமானது. அவர் காசோலைகள் நிறைந்த அந்த முழுப் புத்தகத்தையும் எடுக்கிறார், அவைகளின் அடியில் தன்னுடைய பெயரைக் கையெழுத்திடுகிறார், "மகனே, இங்கேதான் நீ இருக்கிறாய். உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் போய் அதை பெற்றுக் கொள்” என்று கூறுகிறார். ஆமென். அதை நிரப்புவதற்கு பயப்படாதே. அதை நிரப்பி, கையில் வைத்துக் கொண்டு, "கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். அல்லேலூயா. அது நிறைவேறும். ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். (மாற்கு 11:24) காசோலையில் கையெழுத்திட்டு, “கர்த்தாவே, எனக்கு சுகமாகுதல் தேவைப்படுகிறது” என்று சொல்லுங்கள். அதைக் கிழித்துப் போட்டு, "கர்த்தாவே, அங்கே அங்கே நீர் இருக்கிறீர், சுகத்திற்காக நான் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன்” என்று கூறுங்கள். “கர்த்தாவே, நன்றி” என்று கூறி, சுகமாகி விட்டீர்கள் என்று விசுவாசித்து, அங்கிருந்து கடந்து செல்லுங்கள். அது சரியே. அந்தக் காகங்கள் எலியாவுக்கு ஆகாரத்தை கீழே அனுப்பி வைத்தது போல. அங்கேதான் அது இருக்கிறது. நமக்காக உருவாக்கப்பட்ட தேவனுடைய பாதை, 52-0900, பத்தி எண் 188-191 நம்பிக்கை கொண்டிருத்தல் சூழ்நிலைகள் வலது பக்கமும், இடது பக்கமும் விழு வது போல் காணப்பட்டாலும், ஆனால் அந்த விசுவாசம் ஒரு போதும் அசைவதில்லை, ஏனென்றால் அவர் தேவன் என்பதில் நிச்சயமுடைவர்களாயிருக்கிறீர்கள். அவர் தேவனாக இருப்பாரா னால், அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காக்கிறவராயிருக் கிறார். அவர் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்து, அதையே அவர் முறித்துப்போட முடியாது. அவர் தேவனாக இருந்தால், தம்முடைய வாக்குத்தத்தத்தை அவர் காக்க வேண்டும். ஓ, அதை நான் நேசிக்கிறேன். தேவனைக் குறித்த நிச்சயமுடையவர்களாயிருங்கள், 59-0125, பத்தி எண் 65 அது கிரியை செய்யாது, சுயநலமான எந்தக் காரியமும் கிரியை செய்யாது. உங்களுடைய நோக்கமும், குறிக்கோளும் மிகச் சரியாகவும், பூரணமானதாகவும் இருக்க வேண்டும், அப் போது, கேட்பதற்குரிய விசுவாசத்தை உடையவர்களாய் இருப்பீர் கள். "நம்முடைய இருதயம் நம்மைக் கடிந்து கொள்ளவில்லை யென்றால், அப்போது நாம் நம்பிக்கை உடையவர்களாயிருப் போம்." பாருங்கள்? பாருங்கள், நாம் நம்பிக்கை கொண்ட வர்களாயிருக்க வேண்டும். "தேவனுடைய மகிமைக்கும், மரியா தைக்குமுரியதாக இது இருக்க வேண்டும் என்று விரும்புகி றேன்.” அப்போது, விசுவாசம் அசைவதற்கு ஒரு வாய்க்கால் உண்டாயிருக்கும்; அவ்வாறு அது அசையவில்லையென்றால், நீங்கள் மனதளவில், அறிவுப்பூர்வமான விசுவாசத்தை உடை யவர்களாயிருக்கிறீர்கள், அது தேவனிடத்தில் இருந்து வந்த உண்மையான விசுவாசம் அல்ல. அந்த அறிவுப்பூர்வமான விசுவாசம் எங்கும் எதையும் பெற்றுக் கொள்ளச் செய்யாது. அது உங்களை உணர்ச்சிவசப்படச் செய்யும். நீங்கள் எதிர்பார்க்கிற அந்த சுகமாக்குதலை அது உங்களுக்கு கிடைக்கச் செய்யாது. நான் கேள்விப்பட்டேன், இப்போது காண்கிறேன், 65-1127 E, பத்தி எண் 69 தேவன் எதை நேசிக்கிறார் தேவன் இறங்கி வந்து, என்னை முற்றிலும் சுகப்படுத்து வார் என்றால், ஒரு அற்புதத்தை நிகழ்த்துவாரென்றால், அது ஒன்றும் மகத்தான காரியமல்ல, நான் தேவனுடைய வாக்குத்தத் தத்தைப் பார்த்து, அதை என் இருதயத்தில் எடுத்துக் கொள்ளும்போது, அங்கேயே நில்லுங்கள், "இப்போது, இயேசு என்னைச் சுகப்படுத்துகிறார், ஏனென்றால் நான் அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டுள்ளேன். அது என் இருதயத்தில் இருக்கிறது. இப்போது, அவர் பிதாவிற்கு முன்பாக எனக்காகப் பரிந்து பேசுகிறார். நான் சுகமாகி விடுவான்" என்று என்னால் சொல்ல முடியும். “அப்படித்தான் தேவன் நேசிக்கிறார். அவருடைய வார்த்தையில் நின்றுகொண்டு, அது சரியென்று கூறுங்கள். அவர் இப்போது எனனைச் சுகமாக்குகிறார். ஒவ்வொரு நாளும் சுகமாக்குகிறார்.” தேவனை விசுவாசிப்பது, 52-0224, பத்தி எண் 186 ஓ, தேவனே, தேவன் என்னச் செய்யக் கூறினாரோ அதை ஒரு மனிதன் செய்யும்போது, அவர் தேவன் என்பதில் நிச்சயமுடையவனாய் இருக்கிறான்; அவர் பதிலளித்தாக வேண்டும். ஒவ்வொரு முறையும், விசுவாசம் அவரைக் காட்சியில் அழைக்கிறது. எது சரியென்று அறிந்து, அதை நீங்கள் செய்யும்போது, நீங்கள் அவருடைய தேவையைச் சந்திக்கும் போது, நீங்கள் அறிக்கை செய்து, சரியானதைச் செய்து, திரும்ப ஒப்படைத்து, அவைகளை தேவனுக்கு முன்பாக சமர்ப்பிக்கும் போது, அவர் எவ்வளவு மௌனமாய் இருக்கிறார் என்பதைப் பற்றி அக்கறையில்லை, அவர் இன்னும் தேவனாகவே இருக்கிறார். அங்கே, அந்த விசுவாசத்தை வைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய வேலையை நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். இப்போது உங்களுடைய கிரியைகள் மூலமாக உங்களுடைய விசுவாசத்தைக் காண விரும்புகிறார். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அவர் காண விரும்புகிறார். தேவனைக் குறித்த நிச்சயமுடையவர்களாயிருங்கள், 59-0125, பத்தி எண் 60-61 பாவப் பரிகாரம் இங்கே யாரோ ஒருவர் பேசினார். நீண்ட காலத்திற்கு முன்பல்ல, சமீப காலத்தில். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, பாவப் பரிகாரத்தில் தான் தெய்வீக சுகமளித்தல் இருக்கிறது என்பதை விசுவாசிப்பதாக என்னிடம் கூறுகிறீர்களா?" என்றார். நான், “ஆம், ஐயா” என்றேன். ஆம், ஐயா. அவர் என்னுடைய நல்ல பாப்டிஸ்டு சகோதரனாக இருந்தார். அவர், "அவ்வாறு நீங்கள் பொருள் கொள்கிறீர்களா?” என்று கூறினார். “சகோதரன் பிரன்ஹாமே, பாவப் பரிகாரத்தில் தெய்வீக சுகம் இருக்குமானால், அதை எங்கே நீங்கள் அனு மதிக்கிறீர்கள்? ஏசாயாவிலிருந்து எடுக்கிறீர்களா?” என்று அவர் கூறினார். நான், "ஆம், ஐயா” என்று கூறினேன். அதற்கு அவர், "ஓ, இல்லை” என்று கூறினார். “அது தவறென்று என்னால் நிரூபிக்க முடியும்” என்றார். நான், “எல்லாம் சரியே” என்று கூறினேன். அவர், "ஏசாயா தீர்க்கதரிசனம் தீர்க்கதரிசனம் உரைத்தான். அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய மீறுதல்களி னிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம்..." என்றார். மேலும் அவர், "மத்தேயு 8-ல், ஏசாயா தீர்க்கதரிசி யினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி, அவர் நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டார்” என்றார். “அவ்வாறு அங்கே அதை நிறைவேற்றினார்" என்றார். நான் அதற்கு, “என்னுடைய சகோதரனே, ஏசாயா தீர்க்க தரிசி உரைத்ததை நிறைவேற்றுவதற்காக அவர் அதை செய்தாரா னால், பாவப் பரிகாரம் செலுத்தப்படுவதற்கு முன்பாகவே, அவர் பாவப் பரிகாரத்தைச் செய்து விட்டார். ஒரு வருடம் ஆறு மாதங்களுக்கு முன்பே, அவர் மரித்தவராக அல்லது பாவப்பரிகாரத்திற்காக இரத்தத்தைச் சிந்தினார். பாருங்கள்?” என்று கூறினேன். நான், “அப்படியானால் அது என்ன... அதற்குப் பிறகு பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மற்றும் மற்ற அனைவரும் எதனால் சுகமாக்கினார்கள்? அதற்குப் பிறகு அது என்னவாக இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர், "அவர்கள், வெறும் தெரிந்து கொள்ளப்பட்ட பன்னிரெண்டு பேராயிருந்தார்கள்" என்றார். அதற்கு நான், “இப்போது சகோதரனே... அந்த பன்னி ரெண்டு பேர்களுக்கா அந்த அந்த வல்லமை கொடுக்கப்பட்டது?” என்றேன். "ஒ, இல்லை" என்று நான் கூறினேன். “பிலிப்புவும் அவர்களில் ஒருவர் என்று எண்ணுகிறீரா? அவர் அப்போஸ் தலர்களில் ஒருவரா?" என்றேன். இல்லை, ஐயா. அவர் ஒரு கண்காணி. அவர் சமாரியாவின் வழியாக கடந்து சென்று, நோயாளிகளைச் சுகப்படுத்தினார். பிசாசுகள் அலறின. அங்கே அவர்கள் ஒரு உண்மையான எழுப்புதலைப் பெற்றிருந்தார்கள். அது சரியா? அவர் அந்த பன்னிரெண்டு பேர்களில் ஒருவராக இருக்கவில்லை.” அது சரியே. மேலும், இயேசு அவருடைய கடைசி கட்டளையாக, அதோடு "உலகமெங்கும் (போய்)" என்று கூறினார். அது சரியே. ஆகவே, அவர், "நல்லது, அவர்கள் அவ்வாறு செய்திருப் பார்களானால்... சகோதரன் பிரன்ஹாமே, இங்கே கவனியுங்கள்” என்றார். “பாவப் பரிகாரத்தில்தான் தெய்வீக சுகமளித்தல் இருக் கிறது என்று நீங்கள் உபதேசிப்பீர்களானால்" என்றார், மேலும் அவர், “அங்கே ஒரு வேதனையும் ஒருபோதும் இருக்காது. பாவப் பரிகாரத்தில் தான் தெய்வீக சுகமளித்தல் இருக்கிறது என்று போதிப்பீர்களானால், அங்கே வேதனை இருக்காது" என்றார். “இப்பொழுது” என்று கூறினேன். "இரட்சிப்பும் பாவப் பரிகாரத்தில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கி றீர்களா?” என்று கேட்டேன். “ஆம்” என்றார். "அங்கே சோதனை உண்டா?” என்று கேட்டேன். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஆம். “அங்கே சோதனை இருக் குமா?" "ஒ, ஆம், நீங்கள் சோதனைக்குட்படுவீர்கள், ஆனால் அவருடைய கிருபை போதுமானதாயிருக்கும்.” நான், “ஆம், அங்கே வேதனையிருக்கும், ஆனால் அவரு டைய கிருபை போதுமானதாயிருக்கும்” என்று கூறினேன். அது சரியே. அவருடைய கிருபை போதுமானது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார், 52-0810 E, பத்தி எண் E-3 முதல் E-5 வரை அது கர்த்தருடைய வேலை யோசுவாவும் அதே காரியத்தைத் தான் பார்த்து, அவன், "மேலேயும் கீழேயும் இருக்கிற இஸ்ரவேலர் அனைவரும் இந்த நதியண்டை கூடி வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய மகிமை யைக் காணப் போகிறீர்கள்” என்று கூறினார். ஆம், ஐயா. “நீங்கள் எவ்வாறு அந்த நதியைக் கடந்து போகப் போகி றீர்கள்?" "அது என்னுடைய வேலையல்ல. என்னுடைய வேலையெல் லாம், அந்த நதியண்டை நான் நடந்து செல்ல வேண்டும். நான் அந்த நதியை அடையும்போது, அந்த நதியைக் கடந்து போகப் பாதையைத் திறப்பது கர்த்தருடைய வேலை”. அது சரியே. நீங்கள் சாட்சி கொடுப்பதும், உங்களுடைய சுகமாகுதலை உரிமை கோருவதும் உங்களுடைய வேலையாகும். "நான் சுகமானேன்” என்று கூறுங்கள். நீங்கள் சாட்சி பகர்ந்து, அதைப் பிரகடனப்படுத்தின பின், அதை பொறுப்பெறுத்துக் கொள்வது தேவனுடைய வேலை. அது சரியே. அதை முயற்சி செய்து பார்ப் பதற்கு தேவன் உங்களுக்கு தைரியத்தைத் தருவார். ஆகவே, இப்போது, இந்த இரவிலேயே அதை எடுத்துக் கொள்ளுங்கள், அது சரியா அல்லது தவறா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதை நான் விரும்புகிறேன். மேலும் மனிதன்... வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த மனிதனும், காலங்கள் தோறும் இருந்த எந்த மனிதனும், அவர்களுக்குள் ஒரு எழுச்சி உண்டாயிருக்குமானால், அவர்கள் எல்லாம் அங்கே தைரியத்தோடு நின்றவர்களாய், கருப்பு கருப்பு என்றும், வெள்ளை வெள்ளை என்று அழைத்துக் கொண்டும் (அது சரியே) தேவனை அவருடைய வாக்குத்தத்தத்தில் பிடித்துக் கொண்டு அங்கே நின்றார்கள். தேவன் மோசேக்கு கட்டளை கொடுக்கிறார், 53-0508, பத்தி எண் E-17 உருளைக் கிழங்கை கொஞ்சம் நகர்த்துங்கள் நான் உங்களுடைய மேஜைக்குச் சென்று, அங்கே உட் காருவேனானால், நீங்கள் “பிரசங்கியாரே, வாருங்கள், என்னோடு புசியுங்கள்” என்று கூறுவீர்கள். என்னை நேசிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அந்த மேஜையில், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், வறுத்த கோழி, பூசணிக்காய் பை மற்றும் ஐஸ் கிரீம் எல்லாமும் இருந்தது. ஏன், நான் உருளைக் கிழங்குக்கு வரவேற்கப்பட்டது போலவே, பீன்ஸுக்கும் வரவேற்கப்பட்டேன் என்று விசுவாசிக்கிறேன். ஒரு காரியம் என்னவெனில், கோழி வறுவலுக்கு வரவேற்கப்பட்டது போலவே, பைக்கும் (pie) வரவேற்கப்பட்டேன். எல்லாமும் அந்த மேஜை மேல் இருந்தது. ஒரு காரியத்தை மட்டுமே செய்ய வேண்டியவனாக இருந்தேன், "சில பைகளை என் பக்கம் நகர்த்துவீர்களா?" என்று மட்டும் நான் கேட்க வேண்டும். உங்களுடைய அன்பு நல்லதாகவும், மனமுவந்த இரு தயத்தோடும் இருந்தால் நீங்கள், "நிச்சயமாக, என் சகோதரனே, அதில் நல்ல பெரிய துண்டை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீர்கள். அது சரியா? நான், "உருளைக் கிழங்கை என் பக்கம் நகர்த்துவீர்களா?" என்று கேட்டால், "ஏன், நிச்சயமாக, என் சகோதரனே, இங்கே அது இருக்கிறது” என்பீர்கள். ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதத்திற்காகவும், இயேசு கிறிஸ்து மரித்தார். கல்வாரியில் அவர் செலுத்தின பாவப் பரிகாரத்தில் அதைக் கிரயம் கொடுத்து வாங்கி விட்டார். அது மேஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு விசுவாசியும் அதற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லே லூயா. எனக்கு சுகம் தேவைப்படுமானால், நான், "பிதாவே, சிறிது சுகமாகுதலை அனுப்பி வையும்” என்று கூற வேண்டும். அதை என்னுடைய உணவுத்தட்டில் ஊற்றுகிறேன், பெரிய அளவில் புசிக்கிறேன்... இப்போது, நீங்கள் பசியாயிருந்து சாக விரும்பினால், அப்படியே செல்லுங்கள். ஆதியாகமத்தின் பேரில் கேள்விகளும் பதில்களும், 53-0729, பத்தி எண் 45-212 அறிகுறிகள் அறிகுறிகள் என்பது மிகவும் மோசமானது. அது என்ன வென்றால்... பயமுறுத்துவதற்காக பிசாசு கொண்டுள்ள மகத்தான சோளக் கொல்லை பொம்மைகளில் இதுவும் ஒன்றாயிருக்கிறது. அறிகுறிகள் அதனுடன் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். என்னே, யாராவது, எப்போதாவது அப்படிப்பட்ட அறிகுறி களைப் பெற்றிருப்பார்களானால், அது யோனாவாகத்தான் இருக்க வேண்டும். அவன் அறிகுறிகளைக் கொண்டவனாக இருந்தி ருக்க வேண்டும், பின்வாங்கிப்போய், அவருக்குப் பின்னால் கைகள் கட்டப்பட்டு, திமிங்கலத்தின் வயிற்றில், சமுத்திரத்தில் ஒரு மைல் ஆழத்திற்குக் கீழ், புயல் அடிக்கிற சமுத்திரம், கடல் பாசிகள் அவருடைய கழுத்தைச் சுற்றிலும் பின்னியிருந்தது. அறிகுறிகளைப் பற்றிப் பேசுகிறோம், அவர் இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார், அது திமிங்கலத்தின் வயிறாக இருந்தது. அவர் அந்தப் பக்கம் திரும்பிப்பார்த்தார், அது திமிங்கலத்தின் வயிறாக இருந்தது. அவர் பார்த்த இடமெல்லாம் திமிங்கலத்தின் வயிறாக இருந்தது. ஆனால், அவர், “அவைகள் எல்லாம் இருக்கிறது" என்றார். சரி. அவர் கூறினார், “ஒருபோதும் இந்தத் திமிங்கலத்தின் வயிற்றைப் பார்க்க மாட்டேன், ஆனால், ஒரு விசை, கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பார்ப்பேன்” என்றார். அது நீங்கள் எதை நோக்கிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்துள்ளது. உங்களு டைய அறிகுறிகளை நோக்கிப் பார்ப்பீர்களென்றால், அது அங் கேயே இருக்கும். நீங்கள் தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பார்ப்பீர்களென்றால், அறிகுறிகள் மறைந்து போக வேண்டும். யோனா ஏன் அவ்வாறு செய்தான்? அது ஏனென்றால், சாலமோன் அந்த ஆலயத்தைப் பிரதிஷ்டைய செய்யும்போது, அவர் சொன்னார், “கர்த்தாவே, உம்முடைய பிள்ளைகள் எங்கா வது உபத்திரவத்திலிருந்து, இந்த பரிசுத்த இடத்தை (ஆலயத்தை) நோக்கிப்பார்த்து, விண்ணப்பம் செய்வார்களென்றால், அதைப் பரலோகத்திலிருந்து கேட்பீராக” என்று ஜெபித்திருந்தார். சாலமோனுடைய ஜெபத்தை தேவன் கேட்டார் என்று யோனா விசுவாசித்தான். யோனா அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து கொண்டு, தேவன் சாலமோனுடைய ஜெபத்தைக் கேட் டார் என்று விசுவாசிக்கக் கூடுமானால், அதை விட எவ்வளவு அதிகமாய் நாம் இருக்க வேண்டும், ஒருவிசை உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நாம் நோக்கும் போது, அங்கே பரலோகத்தில் இயேசு மாட்சிமை மிகுந்தவருடைய வலது பாரிசத்தில், இரத்தம் சிந்தினவராய் இருக்கிறார். அவருடைய சொந்த சரீரமே ஒரு பலியாக இருக்கிறது. “ஒருவிசை, கர்த்தாவே, நான் உம்மு டைய பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்க்கட்டும்.” ஆம், ஐயா. தேவன் அவரை மூன்று நாள் இரவும் பகலும் உயிருடன் வைத்து, அவரை நினிவே பட்டணத்தில் விடுதலை செய்தார், அவர் அவ்விடத்தைச் சேர்ந்தவராகத்தான் இருந்தார். எதிர்பார்ப்புகள், 53-0507, பத்தி எண் E-24 முதல் E-25 வரை அதை அறிக்கை செய்யுங்கள் ! இப்போது, முதலில் நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு, அதை விசுவாசித்து, அறிக்கை செய்யும் வரை, அவர் உங்களை சுகப்படுத்த முடியாது, அல்லது அவர் உங்களை இரட்சிக்க முடியாது அல்லது உங்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது. அது சரியே. நீங்கள் அதை அறிக்கை செய்ய வேண்டும். நீங்கள் அதை உணர வேண்டும் என்றல்ல, நீங்கள் அதை அறிக்கை செய்ய வேண்டும். உங்களுடைய உணர்ச்சிகளுக்கு அவர் பிரதான ஆசாரியனாக இல்லை; உங்கள் அறிக்கையின் மீது நீங்கள் அறிக்கை செய்யும் காரியத்தின் மீது அவர் பிரதான ஆசாரியனாயிருக்கிறார் (அது சரி). உம்முடைய வார்த்தையின் படியே, கர்த்தாவே, 54-0221, பத்தி எண் E-32 நீங்கள் அறிக்கை செய்யாமல் போனால், நீங்கள் ஒருபோதும் ஜீவிக்க முடியாது. தேவனுடைய வெகுமதியை ஏற்றுக் கொள்ளுங்கள், 53-0219, பத்தி எண் E-10 சுகமாகுதலை நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால், தேவன் உங்களை சுகப்படுத்தினார் என்று விசுவாசித்தால், அதை அறிக்கை செய்யுங்கள், உங்கள் அறிக்கையின் மீது, உங்கள் சரீரத்தை தேவன் கீழ்ப்படியச் செய்வார், ஏனென்றால் உங்களுடைய அறிக்கையின் பேரில், அவர் பிரதான ஆசாரியனா யிருக்கிறார்; பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து, தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலமாகப் பரிந்து பேசுகிறவராக, எதன் மேலும், எதற்காகவும் அறிக்கை செய்ய வேண்டும். அதற்காகவே அவர் மரித்தார். பாவங்களைப் போக்க அவர் மரித்தார். வியாதி பாவத் தின் பலனாக இருக்கிறது. "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.” அதை நினைவில் கொள்ளுங்கள். விசுவாசம் கொள்ளுங்கள். உரிமையை விட்டுக் கொடாதிருங்கள். அதில் நிலைத்து நில்லுங்கள். தேவன் யார்?, 50-0815, பத்தி எண் E-35 அது உங்களுக்கு அருமையாக இருக்கும்போது, அங்கி பரவசமடைந்தவர்களாய் புறப்பட்டு, ஏதோவொன்றை அடைய முயற்சி செய்வீர்கள். அது அவ்வளவு எளிமையானது. "பிதாவே, உமக்கு நன்றி. நீர் அதை எனக்கு வாக்களித்துள்ளீர். நான் இப்போது அதைப் பெற்றுக் கொண்டேன்” என்று கூறுங் கள். அவ்வளவுதான். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். இப்போது, அதை உங்கள் இருதயத்தில் பதியுங்கள். மறுபடியும், மறுபடியும் அதையே கூறுங்கள். சொல்லுங்கள்... அதை முழுமையாக நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், அதை நீங்கள் விசுவாசிக்கு மட்டுமாய் சொல்லிக்கொண்டேயிருங் கள். அதைச் சொல்லிக் கொண்டேயிருங்கள். “என்னுடைய சுகத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி.” ஏனென்றால் அவர் என்ன வாக இருக்கிறார்? "நம்முடைய அறிக்கையின் பேரில், கிறிஸ்து பிரதான ஆசாரியராயிருக்கிறார்." அது சரியா? எபிரேயர் 3. சரி. நம்முடைய அறிக்கையின் பேரில், அவர் பிரதான ஆசாரி யராயிருக்கிறார். இல்லையென்றால், உங்களுக்கு அவர் ஒன்றுமே செய்ய முடியாது, பரிந்து பேச முடியாது, அது செய்து முடிந்து விட்டது என்று முதலில் நீங்கள் அறிக்கை செய்யுமட்டும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது, அது வேதப்பூர்வமானதா? நம்முடைய அறிக்கையின்பேரில் அவர் பிரதான ஆசாரியனாக இருக்கிறார். அப்படியானால், நாம் அறிக்கை செய்யும்போது மட்டுமே அவர் கிரியை செய்ய முடியும். ஏன்?, 61-0128, பத்தி எண் E-82 இப்போது, ஜனங்களைக் குறித்த தரிசனங்களை நான் காண்கிறேன், ஆனால், அவர்கள் சுகமடைந்து விட்டார்கள் என்று அவர் எனக்கு சொல்லுமட்டுமாய், அவர்கள் சுகமடைந்து விட்டார்கள் என்று நான் சொல்ல முடியாது. உங்கள் விசுவாசம் உண்மையிலேயே கிரியை செய்யும் மட்டும், அவரும் அதைச் சொல்ல முடியாது. உங்களுடைய விசுவாசம் கிரியை செய்யும் போது, தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வந்து அதை செயல்படுத்தும். நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை சாட்சி கூற வேண்டும். “இப்போது, நான் பெற்றுக் கொண்டேன், கர்த்தாவே, அது என்றென்றைக்கு மான தீர்வு. நான் என்ன உணர்கிறேன் என்பதல்ல, அதைக் குறித்து ஒன்றுமே கிடையாது; எப்படியும் அதை நான் விசுவாசிக்கப் போகிறேன்.” கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின்படியே, 54-0221, பத்தி எண் E-36 பொதுவான விசுவாசம் இப்போது, பழைய ஏற்பாட்டில், கதவு நிலைக்கால்களில் இரத்தம் பூசப்பட்டபோது, ஈசோப்புக் கொழுந்தின் கொத்தை எடுத்து, இரத்தத்தில் தோய்த்து கதவில் பூசுவார்கள் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஈசோப்பு என்பது சாதாரண, பொது வான செடி. ஈசோப்பினால் அந்த இரத்தம் அவ்விதமாகப் பூசப்பட்டது. நீங்கள் கொஞ்ச தூரம் கடந்து சென்றால், எங்கு வேண்டுமானாலும் சரி, கைநிறைய ஈசோப்பைப் பெற முடியும். அது இந்த இரவில் எவ்வாறு சரியாகப் பொருந்துகிறது, விசுவாசம் என்னும் ஈசோப்பை எடுத்துப் பூசுங்கள். விசுவாசத்தி னாலே அந்த இரத்தத்தைப் பூசுங்கள். எவ்வாறு நாம் இரத்தத் தினால் மூடப்பட்டிருக்கிறோம்: விசுவாசத்தினாலேயே, பொதுவான விசுவாசத்தினாலேயே. நல்லது, “ஆனால், அற்புதங்களுக்கும் சுகமாக்குதலுக்கும், சகோதரன் பிரன்ஹாமே, அது வித்தியாசமான விசுவாசமாகும்" என்று நீங்கள் கூறலாம். இல்லை, அது அதே விசுவாசம் தான். ஒரே விசுவாசம் மாத்திரமே உண்டு. காலத்தால் பரீட்சிக்கப்பட்ட விசுவாசம், 58-0530, பத்தி எண் E-11 சிலர் இயற்கைக்கு மேம்பட்ட விசுவாசத்தைப் பெற முயற்சி செய்கிறார்கள், அதன் காரணமாகவே உங்களுடைய சுகத்தை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். விசுவாசம் என்பது ஒரு பொதுவான காரியமாகும். சபை கூடுதலுக்கு வருவதற்கு நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுள்ளீர்கள். அங்கிருந்து கடந்து செல்வ தற்கு, நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களுடைய காரை இயக்க நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுடைய இரவு உணவைப் புசிப்பதற்கு உங்களுக்கு விசுவாசம் உள்ளது. அவ்வாறே பொதுவான பொதுவான விசுவாசமும் உள்ளது. இப்போது, இரத்தத்தைப் பூசுவதற்கு, அது ஈசோப்பு செடியைக் கொண்டு பூசப்பட்டது. அது ஒரு பொதுவான செடி. பாலஸ்தீனத்தில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. அது எதைக் காண்பிக்கிறது என்றால், விசுவாசத்தைக் கொண்டு இரத்தம் பூசப்படுவதற்கு ஏதோவொரு பெரிய இயற்கைக்கு மேம்பட்ட எதுவும் தேவையில்லை. அதற்காக நீங்கள் எல்லாவிதமான முனைவர் பட்டங்களை எல்லாம் அதைச் செய்வதறகு பெற் றிருக்க வேண்டும் என்பதில்லை. அது பொதுவானது, ஒவ்வொரு நாளும் தேவனை விசுவாசிப்பதற்கு உண்டான விசுவாசம். அடையாளம், 64-0308, பத்தி எண் 18 காலடி வைக்கிற இடமெல்லாம் உங்களுடையது சீமாட்டியே, இன்றிரவில் தேவன் உங்களுக்குச் சுகத்தைக் கொடுக்கிறார், உங்களுக்கும் இங்கிருக்கிற ஒவ்வொருவருக்கும் சுகத்தைக் கொடுக்கிறார். அவர் உங்களுக்குச் சுகத்தைக் கொடுக்கிறார். அது உங்களுடைய சுதந்தரமாக இருக்கிறது. அவிசுவாசம் என்னும் எமோரியர்கள், கானானியர்கள், மற்றும் எல்லாமும் உங்களைச் சூழ்ந்திருக்கும். ஆனால், உள்ளே சென்று அதை எடுத்துக் கொள்ளுங்கள், அது உங்களுடையது. அது உங்களுக்குச் சொந்தமானது. அது சரியே. “நான் ஆட்சி செய்ய வேண்டுமானால், அதற்காக நான் யுத்தம் செய்ய வேண்டும்; கர்த்தாவே, என்னுடைய தைரியத்தை அதிகரியும்." இது சுற்றுலா பயணத்திற்கான மைதானம் அல்ல; இது யுத்த களம்... உடன்படிக்கையின் தூதன், 54-0301, பத்தி எண் E-34 "நான் உங்களுக்கு அந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்று தேவன் அவர்கள் எகிப்திலிருக்கும் போது கூறினார். ஆனால், “நான் அங்கு சென்று எல்லாவற்றையும் துடைத்துப் போடுவேன், அங்குள்ள வீடுகளையெல்லாம் அழகுபடுத்தி, மற்றும் எல்லாமும் செய்து, திரைச்சீலைகளைத் தொங்க விடுவேன். நீங்கள் அனைவரும் அதற்குள் கடந்து சென்றால் போதும்” என்று அவர் கூறவில்லை. இல்லை, இல்லை. அவர்கள் எடுத்துக் கொள்ளப்போகும் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராட வேண்டும். அது சரியே. யுத்தம் செய்தல், ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்வதற்கு - ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராட வேண்டும். ஆனால் அவர், "உங்கள் காலடி வைக்கும் இடமெல்லாம் உங்களுடையது” என்றார். காலடி வைப்பது என்பது சுதந்தரத்தைக் குறிக்கிறது. இன்றும் அதே காரியம் தான். தெய்வீக சுகமளித்தல் நமக்குரியது. பரிசுத்த ஆவியானவர் நமக்குச் சொந்தமானவர். அது நம்முடைய சொத்து. ஆனால், அதற்காக, ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் நீங்கள் போராட வேண்டும். ஆம், ஐயா. ஆனால் சகோதரனே, காலடி வைப்பது தான் சுதந்தரம். தொடர்ந்து போராடிக் கொண்டேயிருங்கள். அதை எடுத்துக் கொள்ளுங்கள். “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று பிசாசு கூறுவான். "நீ ஒரு பொய்யன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று தேவன் என்று தேவன் சொல்லியிருக்கிறார்" என்று கூறுங்கள். அதை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் காலடி வைக்கும் இடமெல்லாம், அது தான் சுதந்தரம். அது சரியே. தாவீதின் குமாரனே, என்மீது இரக்கமாயிரும், 61-0215, பத்தி எண் E-43 மேய்ப்பன் ஒரு சமயம் இப்படியாக கூறப்பட்டது, உங்களுக்குத் தெரியும்; இது அதிகாரப்பூர்வமானதா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பாலஸ்தீனாவில் இருக்கிற மிஷனரி எனக்கு இதைக் கூறினார். எது எப்படியாயினும், ஒரு ஆட்டுடன் ஒரு-ஒரு மேய்ப்பன் வந்து கொண்டிருப்பதை அவர் பார்த்தாராம். மேலும் அவர், “ஒரு ஆட்டை அவர் சுமக்க வேண்டியதாயிருந் தது, அந்த ஆட்டின் கால் முறிந்திருந்தது, அதில் கட்டு போடப்பட்டிருந்தது. அவர் இன்னும், “ஐயா, அந்த ஆடு விழுந்து விட்டதா, விழுந்து காலை ஒடித்துக் கொண்டதா?” என்று கேட்டார். அவர், “இல்லை” என்று கூறினார். "அதன் காலுக்கு என்னவாயிற்று?" என்றார். அதற்கு அந்த மேய்ப்பன், அதை நான் ஒடித்து விட்டேன்” என்றார். “நீரா அதை ஒடித்து விட்டீர்?” என்று கேட்டார். “அதைச் செய்திருப்பீரேயானால் நீர் ஒரு கொடூரமான மேய்ப்பனாக இருக்க வேண்டும்” என்றார். அதற்கு அவர், "இல்லை" என்று கூறினார். அவர், "பாருங்கள், இந்த ஆடு என்னைப் பொருட்படுத்துவதில்லை, அழிவை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது, அது கொல்லப் படப்போகிறது என்பதை அறிந்திருந்தேன். ஆகவே, அது என்னை நெருங்கி வருவதற்காக அதன் காலை முறிக்க வேண்டியதா யிற்று. அதற்கு சிறிய பிரத்தியேகமான சிறிய பிரத்தியேகமான வழிநடத்துதலைக் கொடுப்பதற்காக, என்னுடைய கரத்தினாலேயே அதைப் போஷிக்க வேண்டும். அது, அதை என்னை அதிகமாக நேசிக்கச் செய்யும்” என்று கூறினார். ஆகவே தேவன் ஒருவேளை, சில நேரங்களில், உங்க ளுக்கு ஏதோ ஒரு சிறிய காரியம் சம்பவிக்க அனுமதிப்பார். அவருக்கு மிக அருகில் கொண்டுவருவதற்கும், கொஞ்சம் அதிகப்படியாக உங்களை நேசிப்பதற்கும், பின்பு விசேஷித்த வழி நடத்துதலை, ஒரு சுகமாக்குதலைக் கொடுப்பதற்குமாகும். நீங்கள், "ஆம், கர்த்தாவே, அது நீர் என்று விசுவாசிக்கிறேன்” என்று கூறுவீர்கள். பாருங்கள்? அதுதான் இது. தேவன் எவ்வாறு அதைச் செய்கிறார் என்று பாருங்கள்? அவர் அதிசயமானவ ரல்லவா? அவரை நாம் விசுவாசித்தால் மட்டும் போதும். யோபு, 55-0223, பத்தி எண் E-14 தூண்டில் தெய்வீக சுகமளித்தல் என்பது அதிசயமானது, ஆனால் தெய்வீக சுகமளித்தல் என்பது, தூண்டிலில் உள்ள இரையைப் போன்றதாகும். நீங்கள் தூண்டில் முள்ளை மீனுக்குக் காட்டக் கூடாது; நீங்கள் இரையைக் காட்ட வேண்டும். அந்த மீன் இரையைப் பிடித்தால், அது தூண்டில் முள்ளையும் சேர்த்துப் பிடித்து விடும். ஒரு மனிதன் எப்போதாவது சுகத்தைப் பெற்று, தேவனுடைய வல்லமையைப் பார்ப்பானென்றால், அது உங்க ளுக்கு என்ன செய்யும், அவன் ஒரு விசுவாசியாகி விடுவான். அது சரியே. கன்மலையிலிருந்து வரும் தண்ணீர், 55-0224, பத்தி எண் E-2 சுகமாக்கப்பட்டதில் தரித்திருத்தல் யாரோ ஒருவர், “சுகமாக்கப்படுதல் நிரந்தரமா?” என்று கேட்டார். விசுவாசம் நிலைத்திருக்கும் மட்டும், சுகமாக்கப்பட்ட தும் நிலைத்து நிற்கும். ஆனால், விசுவாசம் தோல்வியடையும் போது, உங்களுக்குக் கிடைத்த சுகமாக்கப்படுதலையும் இழந்து விடுவீர்கள். பீடத்தண்டை வந்த ஒவ்வொரு மனிதனும், மனந் திரும்புதலைப் பெற்றவர்கள், அவர்களின் எல்லா நாட்களிலும் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்களா? இன்று இரவில் அவன் தேவனுடைய பிள்ளையாய் இருக்கக்கூடும், நாளைய தினம் ஒரு பிசாசின் பிள்ளையாய் இருக்கக்கூடும். அது எப்பொழுது சம்ப விக்கிறது என்றால், தேவனிடத்திலிருக்கிற அவனுடைய விசுவா சத்தை இழந்து போகும்போது, அதுவே அவனை பின்மாற்றம் அடையச் செய்கிறது. வியாதிகளும் உபத்திரவங்களும், 50-0100, பத்தி எண் 26 சுகமாக்கப்படுதல் நிலைத்திருக்கக்கூடியதா? உண்மையாக அது நிலைத்திருக்கக்கூடியது தான். ஆனால் அது என்ன, பிசாசு அவர்களை அவனுடைய ஆதிக்கத்திற்குள் கொண்டு வரும்போது, சுகமாகுதல் அவனை விட்டுப் போய் விடுகின்றது, ஒருவேளை யார் மூலமாவது, அவன் அவர்களைப் பிடித்துக் கொள்கின்றான். அப்போது அவர்கள் சிறிது நம்பிக்கையற்றவர்கள் ஆகின்றனர். அல்லது ஏதோவொரு வழியில், பின்னர், அவர்களை விட்டு விலகின வியாதி மறுபடியும் அவர்களிடத்தில் வருகின்றது. உங்களுக்குத் தெரியும், இயேசு, "அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: திரும்பிப் போய் தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன் னோடே கூட்டிக்கொண்டு வந்து..." என்று சொன்னார். இப்போது, அந்த வீட்டின் நல்ல மனிதன் (அது உங்களுடைய விசுவாச மாயிருக்கிறது), அங்கே நின்று கொண்டிருக்கவில்லையெனில், திருப்பி அனுப்புவதற்கு ஆயத்தமாயில்லாவிட்டால், நல்லது, அப்போது அவன் உள்ளே வந்து விடுவான், அப்போது உங்கள் முன்னிலைமையைக் காட்டிலும் பின்நிலைமை மோசமானதாக இருக்கும். பின்பு அநேக நேரங்களில், ஜனங்கள் கெட்ட நோக் கத்துடனோ அல்லது வேறு ஏதாவது ஒன்றினாலோ அல்லது கட்டியினாலோ அல்லது எவ்வகையான வீக்கங்களோ, அது மரிக் கும் போது, அதிலிருந்த ஜீவன் அதை விட்டுப் போய் விடுகிறது, உடனடியாக அங்கே அவர்கள் விடுதலைப் பெறுகின்றனர். சில நாட்களில் நீங்கள் நல்ல உணர்வைப் பெறுகிறீர்கள். அதன் பின்பு, ஏறெக்குறைய எழுபத்திரண்டு மணி நேரம் சென்ற பிறகு, நீங்கள் நோயைப் பெறத் தொடங்குகிறீர்கள். பின்பு உண்மை யாகவே வியாதியஸ்தராகி விடுகிறீர்கள். ஏனென்றால், இப்போது அது மரித்துப்போன ஒரு மாமிசக் குவியலாய் இருக்கிறது. பின்பு அது உடைக்கப்படுமானால், அதை வெளியேற்றுவதற்கு ஒரு வழியும் இல்லை எனில், ஒருவேளை, அது உள்ளுக்குள்ளேயே இருக்கிறது...?... ஏதோவொன்று அதைப் பிடித்துக்கொண்டிருக் கிறது, அது ஈரலுக்கும் குடலுக்கும் இடையிலிருக்கும் சவ்வு போன்ற பகுதியிலோ அல்லது வேறு எங்காவது போட்டு விடும். பின்பு உங்களுக்குள் ஒரு மாமிசக் குவியல் உண்டாகும், அதுவும் அழுகிப் போனதாய் இருக்கும். நிச்சயமாகவே உங்கள் இருதயம் இரத்தத்தைச் சுற்றிவரச் செய்கிறது, சரீரத்தைச் சுத்தம் பண்ணுகிறது, உங்கள் இருதயத்தின் மூலமாக உந்தித் தள்ளுகிறது. அது நோயாளியை பயங்கர வியாதிக்குள்ளாக்குகிறது, தொற்று நோயாகிறது, காய்ச்சல் மற்றும் எல்லாமும் வருகிறது. பின்பு அந்த மனிதன், "நல்லது, நான் அங்கு நின்று கொண் டிருந்த போதே அதை அறிவேன், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சுகமடைந்தவனாக இருந்தேன். ஆனால், இப்போது என் சுகத்தை இழந்து விட்டது போல் அனுமானிக்கிறேன்” என்று கூறுவான். நல்லது, நீங்கள் சுகத்தைப் பெற்று விட்டீர்கள் என்பதற்கு உலகத்திலேயே சிறந்த அடையாளமாக அது இருக்கிறது. பாருங்கள்? தெய்வீக சுகமளித்தல், 54-0620 E, பத்தி எண் E-1, E-2 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக் கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. (எபிரெயர் 10:23) விசுவாசம் அல்லது பயம் இன்றிரவிலும் மனிதனோடு இருக்கிற பிரச்சனை அது தான்; இன்றிரவில் ஜனங்களுக்குள் இருக்கிற பிரச்சனையும் அது தான்; நீங்கள் பயமடைந்தவர்களாய் இருக்கிறீர்கள். முழு சுவிசேஷ ஜனங்களின் மேலுருக்கிற மிகப்பெரிய சாபம் அது தான், அல்லது மற்ற ஜனங்கள்; ஏனென்றால் அவர்கள் பயங் கொள்ளுகின்றனர். தேவன் வழியை உண்டுபண்ணியுள்ளார், அதற்காக தேவனுடைய வார்த்தையை எடுப்பதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். இன்று இரவில் நீங்கள் பயப்படாமலிருந்தால், ஏன், உங்களுடைய சுகத்தை விசுவாசத்தினால் எடுத்துக் கொள்ள முடியும், தேவன் அதை வாக்களித்துள்ளார் என்று அறியுங்கள். அது எவ்வளவு ஆழத்திலிருந்தாலும் உங்களை விட்டு அகன்று விடும். பயப்படுதல், நடுங்குதல்... அதை நான் கவனித்துள்ளேன். அதன் காரணமாகவே, சுகமாகுதலில், அப்படிப்பட்ட ஒரு விசுவாசியாயிருக்கிறேன். அந்த பயத்திலிருந்து நீங்கள் வெளியே வரக்கூடுமானால், அந்த இடத்தில் அன்பை வைப்பீர்களேயானால், ஏதோவொன்று சம்பவிக்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு மனினை ஆளுகை செய்வதற்கு இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அவைகளில் ஒன்று விசுவாசம், அது நல்ல பலனைக் கொண்டு வரும்; மற்றொன்று பயம், அதற்குள் ஒரு மதிப்பும் கிடையாது. விசுவாசம் தேவனுடையது. பயம் பிசாசினுடையது. ஐக்கியம் கொள்வதற்கான வழி, 55-1009, பத்தி எண் E-26 ...பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு... (மாற்கு 5:36) புரிந்து கொள்ளுதலில் ஏற்படும் ஒரு குறைபாடு இப்போது, அமெரிக்காவில் நீங்கள் எதை வேண்டு மானாலும் பெற்றுக் கொள்ளலாம். நான் இங்கே ஒரு ஆராத னைக்குச் சென்றிருந்தேன், அநேக நாட்களுக்கு முன்பல்ல, அங்கே தெய்வீக சுகமளித்தலுக்காக பயிற்சி எடுப்பது போல் காணப்பட்டது. அதற்குரிய அந்த மனிதன் மேலும் கீழுமாக குதிக்கிறான். எவ்வளவு சத்தமிட முடியுமோ அவ்வளவாக சத்தமிடுகிறான், அவனால் எவ்வளவு கடினமாக பிரசங்க பீடத்தை உதைக்க முடியுமோ அவ்வளவாய் உதைத்து, "தேவனே, நான் உம்மிடத்தில் கேட்கிறேன்” என்றான். ஓ, இரக்கம். நான், “தேவனே, என் சகோதரன் மேல் கிருபையாயிரும். அவன் அதை புரிந்து கொள்கிறவனாக இல்லை” என்று எண்ணினேன். தேவனை இதைச் செய்யும், அதைச் செய்யும் என்று கட்டளையிட்டு கேட்பதற்கு நாம் யார்? அவர் ஏற்கனவே செய்து முடித்து விட்டார்; அவரை விசுவாசித் தால் மட்டும் போதும். அவ்வளவு தான். முதியவர் ஒருவரை ஒரு துணியில் வைத்துள்ளனர், அதை முன்னும் பின்னுமாக அசைக்கிறார்கள் (தொட்டில் ஆட்டுவது போல்) இந்த விதமாக, அந்த மனிதன் இருதயக் கோளாறு உள்ளவர். அவருக்காக நான் அனுதாபப்பட்டேன். வேறு ஒரு மனிதன் கீல்வாத நோய் கொண்டவராக வந்தார்; அவன் அவரைப் பிடித்து அசைத்தான், அவரை அடித்தான், அவனுடைய கையைக் கொண்டு எவ்வளவு பலமாக அடிக்க முடியுமோ அவ்வளவு ஓங்கி அடித்தான். அவ்விதமாக உலுக்கி, அடித்து அவன் கூறினான், "கீல் வாதத்தை நான் வெறுக்கிறேன்” என்று. அது பிசாசை வெளியே எடுத்துப் போடாது. நீ எவ்வளவு சத்தமிடுகிறாய் என்பதைப் பற்றி பிசாசு சட்டைசெய்வதில்லை. அவன் கேட்பதில் கடினமுள்ளவனல்ல. ஆனால் விசுவாசம் எங்கே தங்கியிருக்கிறது என்பதை நிச்சயமாக அறிவான். அந்த ஒரு காரியம் தான் அவனை எழுந்து நடக்கப் பண்ணும். பெந்தெகொஸ்தேயினர் எங்கே இழந்து போய் விட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன் என்றால், 55-1111, பத்தி எண் E-72 மேலும், நீங்கள் விசுவாமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். (மத்தேயு 21:22) தேவனுடைய தேவைகளை சந்தித்தல் கிறிஸ்து கல்வாரியில் மரித்து உங்களைச் சுகப்படுத்தி னார். அங்கே உன்னை இரட்சித்தார். மற்றவர்கள் செய்வது போல, நீங்களும் விசுவாசத்தோடு அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி. அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அங்கே தரித்திருந்து, அடித்துக் கொண்டு, முழு இரவும் அழத் தேவையில்லை. உங்கள் தலை நரைத்து போகுமட்டும் நீங்கள் அழுது ஜெபிக்கலாம், பலிபீடத்திலேயே சமர்ப்பித்து பின்னர் மரிக்கலாம். தேவன் உங்களுக்கருளிய அந்த இரத்தத் தின் பலியை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நீங்கள் இழக்கப்பட்டு போவீர்கள். நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்று நான் கவலைப்படவில்லை. நான் எவ்வாறு உணர்கிறேன் என்பதில் செல்ல மாட்டேன்; அநேக சமயங்களில் நான் மிகவும் பின்னால் இருப்பதாக உணர்கிறேன். ஆனால் வேதாகமம், நான் தேவனு டைய தேவைகளை சந்தித்து விட்டேன் என்று சொல்லுகிறது. ஆபிரகாமின் உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டது, 61-0210, பத்தி எண் E-68 ஆபிரகாமின் வித்துக்கள் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டு, அதைப்பற்றிப் பிடித்துக் கொள்வார்கள். அவர்கள் தேவனை அவருடைய நிபந்தனை களின் பேரில் சந்தித்து, "பிதாவே, அது இங்கிருக்கிறது. அது இன்று இரவே முடிந்து விட்டது” என்று கூறுவார்கள். ஆபிரகாமின் உண்மையான வித்துக்களின் வழி அதுவே... அதை விட்டு எதுவும் அவர்களை அசைக்க முடியாது. அங்கே மன வேதனை இருக்காது, வலி இருக்காது, வலிகள் இருக்காது, அங்கு ஒன்றுமே இருக்காது, மருத்துவர் இல்லை, எதுவுமே இல்லை... பத்தாயிரம் பேர் அங்கு நின்று கொண்டு, "நீ மரித்துக் கொண்டிருக்கிறாய்" என்று கூறலாம். அதற்கு நீங்கள், “அது அவ்வாறில்லை” என்று கூறு வீர்கள். பாருங்கள்? அவர்கள் மறுப்பார்கள். தேவனை சந்திக்கும் போது, வேறு எதையும் அவர்கள் கேட்க மறுப்பார்கள். அந்த வேளை முதற்கொண்டு, 61-0520, பத்தி எண் E-46 ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் யுத்தம் செய்யுங்கள் இஸ்ரவேலருக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஒரு தேசம் வாக்களிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் அதன் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் யுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. "உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்தேன்” தேவன் அவ்வாறு யோசுவாவிற்கு கூறினார். அங்கு எல்லாமும் இருந்தது. தேசம் அங்கிருந்தது, தேவன் அவர்களுக்கு அதைக் கொடுத்தார்; ஆனால் அதற்காக அவர்கள் யுத்தம் செய்ய வேண்டும். தெய்வீக சுகமளித்தலைப் பொருத்தமட்டிலும் அதே வழிதான். அதை ஏற்றுக் கொள்வதற்கான தைரியம் உங்களுக் கிருந்தால், தேவன் உன்னைச் சுகப்படுத்துவதற்காக வல்லமை யைக் கொண்டுள்ளார். ஆனால் வழியில் ஒவ்வொரு அங்குலத் திற்காகவும் போராட வேண்டும். உங்களை இரட்சிக்கும்படிக்கு தேவனிடத்தில் வியக்கத்தக்க கிருபை உண்டு, அதை அவர் உனக்குச் செய்வார். ஆனால் உன்னுடைய வழியில் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் நீங்கள் யுத்தம் செய்ய வேண்டும். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம், 62-0121 E, பத்தி எண் E29 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். (யோசுவா 1:9) கபடு இல்லை பாருங்கள், உங்கள் விசுவாசம் நீங்கள் எப்படி உணரு கிறீர்கள் என்பதைப் பொறுத்ததல்ல; உங்கள் விசுவாசம் என்பது நீங்கள் விசுவாசிப்பதைப் பொறுத்தது. நீங்கள் அதை உண்மை யாகவே விசுவாசிப்பீர்களென்றால், நீங்கள் எவ்வாறு உணர் கிறீர்கள் என்பதைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டேன், நீங்கள் ஒருபோதும் சுகம் பெறவில்லை என்று ஒரு போதும் கூறாதீர்கள். நீங்கள் எப்போதும் அதை விசுவாசிக்க வேண்டும். அதுதான் கிரியை செய்யும். பாருங்கள்? நான் சுகமாக்கும் ஆராதனைகளைக் கொண்டிருக்கும் போது, பீடத்தண்டை நடப்பதும் அதுதான். அவ்வழியில் நூற்றுக் கணக்கான ஜனங்கள் பீடத்தண்டை வருகிறார்கள், "ஓ, சகோ தரன் பிரன்ஹாம், நான் முழு விசுவாசத்தையும் பெற்றுள்ளேன்” என்பார்கள். அதில் மை இருக்கும் என்றால், அது, “நான்” என்ற புள்ளியை வைக்காது. பாருங்கள், விசுவாசத்திற்குப் பதிலாக உங்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. விசுவாசம் என்பது சாதகமாக இருக்கும். அதை அசைப்பதற்கு ஒன்றும், ஒன்றுமேயில்லை; அது சாதகமானது. நீங்கள் எவ்வளவுக்கதிகமாய் சுகவீனமாயிருக்கிறீர்கள் என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஒவ்வொன்றும் எப்படி சென்று கொண்டிருக்கிறது, அதைக் குறித்தும் கவலையில்லை... இப்போது, அதைக் கபடற்றதாய் ஆக்க நீங்கள் முயற்சித்தால், அது கபடற்ற தன்மையை எடுக்காது. பிசாசு அப்படியல்ல... அவன் கபடுள்ளவனாக இருக்கிறான், அதை எப்படி பலர் அறியும்படி செய்ய வேண்டும் என்பதையும் அவன் அறிவான். ஆனால், பொருட்களை நீங்கள் கொண்டுள்ள போது, அது சத்தமிடுதலை ஏற்றுக் கொள்ளாது. இரைவதையோ, முறையிட்டு சத்தமிடுதலையோ, குதிப்பதையோ எடுத்துக் கொள்ளாது; அது விசுவாசத்தையே எடுத்துக் கொள்ளும். அவர் அதை அடையாளம் கண்டு கொள்வார். கவலைப்படாதீர்கள், வார்த்தையை மட்டும் பேசுங்கள். தரிசனங்கள் என்றால் என்ன?, 56-0421 பத்தி எண் E-16 முதல் E17 வரை தேவனுடைய அன்பு வெளிப்படுதல் ஓ, இராஜாதி இராஜாவுடன் அது எவ்வளவு வித்தியா சமானதாக இருக்கிறது. நீ மிகச்சிறியவனாக இருக்க முடியாது. உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் அவர் காண்கிறவராக இருக்கிறார். உனக்குள் இருப்பவை எல்லாவற்றையும் அவர் அறிந்தவராக இருக்கிறார். அவர்... அவருக்குத் தெரியாமல் ஒரு குருவி கூட தெருவில் விழ முடியாது. அவர் அறியாதபடிக்கு ஒரு சிறிய மலர் கூட மலர்வதில்லை, ஒரு சிறிய மலர் கூட வருவதில்லை. ஆகவே, மலரைக் காட்டிலும் நீங்கள் எவ்வளவு விசேஷித்தவர்கள். இங்கே நீங்கள் வியாதியஸ்தராய் படுத்திருந் தால், அல்லது நெருக்கத்திலிருந்தால், இராஜாதி இராஜா உங்க ளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாமலிருக் கிறீர்களா? உங்களுடைய நலனிலும், உங்களுடைய சுகத்திலும் அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை அறியாமலிருக்கிறீர்களா? நீ பாவம் நிறைந்தவனாக இருக்கலாம், நீ அவருடைய குடிமகனாய் ஆகவேண்டும் என்பதில் அக்கறை உடையவராக இருக்கிறார் என்பதை அறியாமலிருக்கிறாயா? நீங்கள், “ஆனால் நான் சிறப்பு வாய்ந்த மனிதனாக இருக்கவில்லை” என்று கூறலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் நீ அவ்வாறு இல்லை. தேவன் உன்னை விரும்புகிறார். அவர் உன்னை நேசிக்கிறார். அவருடைய அன்பு வெளிப்பட்ட போது, தேவன் அவ்வளவாய் உன்னை நேசித்தார், இராஜாதிபத்தியக் கிருபை அதன் இடத்தை எடுத்துக் கொண்டு, அவர் தம்மிடத்தில் உன்னை மீட்பதற்காக ஒரு இரட்சகரை அனுப்பினார். இந்த இரட்சகரில், அவர் நம்முடைய அக்கிரமங்களி னிமித்தம் காயப்பட்டார், ஏனென்றால் தேவன் உன்னை நேசித்தார். தேவன், அவருடைய ஜனங்களின் பாடுகளைப் பார்த்தார், அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள், தேவனுடைய கிருபை ஒரு வழியை உண்டுபண்ணுகிறது, ஏனென்றால் அவருடைய அன்பிற்கு அது தேவைப்பட்டது. அவருடைய அன்பு, அவருடைய உணர்வுகள் மூலமாக வெளிப்பட்ட போது, கிறிஸ்து அவருடைய இடத்தை எடுத்துக் கொள்ள வெளியே வந்தார். தெய்வீக அன்பு வெளிப்பட்ட போது, இராஜாதிபத்திய கிருபை அதனுடைய இடத்தை எடுத்துக் கொண்டது, 57-0126 E, பத்தி எண் E-16 முதல் E-17 வரை தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள்ளுங்கள் இதில் அவள் இணக்கமுள்ளவளாகுமட்டும் காத்திருக் கவில்லை; அவள் ஜீவனை உணர்வது வரைக்கும் காத்திருக்க வில்லை; அல்லது அவள் ஒரு தாயாகப் போகிறாள் என்பதை நிரூபிப்பதற்கு உண்டான ஒருவகையான உணர்வு வருவது வரை காத்திருக்கவில்லை. அவள் அவருடைய வார்த்தையை எடுத்துக் கொண்டாள், அது போதுமானதாக இருந்தது. இன்று இரவிலும், நீங்களும் அதையே செய்ய வேண் டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் நல்ல உணர்வடைவது வரைக்கும் காத்திருக்க வேண்டாம், உங்கள் கை நன்றாக செயல்படுவது வரைக்கும் காத்திருக்க வேண்டாம், அல்லது நன்றாக அடியெடுத்து வைத்து நடப்பது வரையிலும் காத்திருக்க வேண்டாம்; படிப்படியாக நீங்கள் சுகம் பெற்று வருகிறீர்கள் என்று மருத்துவர் கூறுவது வரையிலும் நீங்கள் காத்திருக்க வேண்டாம், ஆனால் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள் ளுங்கள், அதை விசுவாசிக்கத் தொடங்குங்கள். அவருடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளுதல், அவரைப் பிரியப்படுத்துவதற்கான ஒரே வழி அதுதான். அவ்வழியில் தான் அற்புதங்கள் நிகழ்த்தப்படுகின்றன. தேவனை அவருடைய வார்த்தையில் எடுக்கும் போது, செய்ய முடியாதவைகள் கூட உண்மைப் பொரு ளாய் செய்யப்படுகிறது. தேவனை அவருடைய வார்த்தையில் எடுக்கும் போது, அது கேள்விக்குறியாகாது. மரியாளின் விசுவாசம், 60-0311, பத்தி எண் E-23 அவருடைய வாக்குத்தத்தத்திற்கு தேவன் உண்மையுள் ளவராயிருக்கிறார், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொறுத்தல்ல; அவருடைய வார்த்தையைத் தோல்வியடையச் செய்வாரானால், அதற்கு முன்பதாக பரலோகம் கடன்பட்டு திருப்பிக் கொடுக்க முடியாத ஒரு நிலைக்குள்ளாக வேண்டும். அவரால் காத்துக் கொள்ள முடியாத எந்த வாக்குத்தத்தத்தையும் அவர் ஒருபோதும் கொடுப்பதில்லை. “உன்னுடைய எல்லா நோய் களையும் குணப்படுத்துகிற கர்த்தர் நானே. வியாதியஸ்தர்கள் மேல் அவர்கள் கைகளை வைப்பார்களென்றால், அவர்கள் சுக மடைவார்கள்." ஆமென். "நீங்கள் விசுவாசித்தால் எல்லாம் கூடும்.” சோதனைக்குப்பின் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்ளுதல், 64-0322, பத்தி எண் 105 ஆபிரகாமின் வித்து தேவன் மனத்தாக்கத்தை (வலிய இழுத்தல்) சபைக்குள் கொண்டு வருகிறார், "தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு பிள்ளையும் சோதிக்கப்பட வேண்டும், நிரூபிக்கப்பட வேண்டும், சோதனை செய்யப்பட வேண்டும். வியாதி உங்களைத் தாக்கும் படிக்கு அவர் அனுமதிக்கிறார். உங்களுக்கு அவர் வியாதியை அனுமதித்து உங்களை சோதிக்கிறார், உங்களை நிரூபிப்பதற்காக, உலகத்திற்கு நீங்கள் உண்மையான ஆபிரகாமின் வித்து என்பதைக் காண்பிக்க அவ்வாறு செய்கிறார். அவர் சொந்த சித்தத் தின்படி அவர் அதை அனுமதிக்கிறார். அவர் பேரழிவுகளை அனுமதிக்கிறார்; நண்பர்கள் உங்களுக்கு விரோதமாக எழும்பும் படி அவர் அனுமதிக்கிறார். அவர் இந்த எல்லா காரியங்களையும் அனுமதிக்கிறார். உங்களை சோதிப்பதற்காக, பிசாசை அவிழ்த்து விடுகிறார், அவன் எல்லாவற்றையும் செய்வான், ஆனால் உங்கள் ஜீவனைத் தொட முடியாது. பயங்கர வியாதியால் உங்களைப் படுக்கையில் போடுவான்; உங்களுடைய பக்கத்து வீட்டுக் காரர்களை உங்களுக்கு விரோதமாகத் திருப்புவான்; சபையையும் உங்களுக்கு விரோதமாக எழும்பப் பண்ணுவான்; அவன் எதை வேண்டுமானாலும் செய்வான், அதை அவன் செய்வதற்கு, அவனைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நமக்கோ அது பொன்னிலும் விலையேறப்பெற்றது என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்ளுதல், 59-1108, பத்தி எண் 32 கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன் யாருடைய தலையிலும் என்னுடைய கரங்களை வைக்க வேண்டும் என்பது அவசியமல்ல, அல்லது, உங்களுடைய கரங் களை என் மீது வைக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. அவசியமானது என்னவென்றால், உங்களுடைய கரங்களை அவர் மீது வைக்க வேண்டும் என்பதே. அவர் ஒருவரே. என்னைப் பொறுத்த மட்டிலும் நான் உங்களுடைய சகோதரன்; அவர் உங்களுடைய கர்த்தர். ஆகவே, கரங்களை அவர் மீது வையுங் கள்; அவ்வாறு செய்யும் போது, அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு, "கர்த்தாவே, நான் இதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். நாங்கள் இயேசுவைக் காண முடியுமா?, 58-0619 E, பத்தி எண் E-9 ஜீவியம் தாறுமாறாக்கப்பட்டது பிசாசு தாறுமாறாக்குகிறான், அவனால் சிருஷ்டிக்க முடியாது; அவன் மாற்றுகிறான். முதலாவது அவனுக்கு ஒரு வழி வேண்டும். மருத்து வரைக் கேளுங்கள். தேவன் ஆதியிலே மனிதனை சிருஷ்டித்த வண்ணமாக உங்கள் சரீரம் சரியாக இருக்குமானால், நோய் வாய்ப்படவே முடியாது. ஆனால் பிசாசு அதைத் தாறுமாறாகச் செய்வதற்கு எங்கோ ஒரு பலவீனத்தைக் காண்கிறான். உங்கள் ஆத்துமாவோடும் அதே காரியம் தான். கார ணம் என்னவெனில், நீங்கள் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொள்வதில்லை, பிசாசு உங்களிலுள்ள அந்தப் பலவீனமான பாகத்தைக் கண்டு, அதைத் தாறுமாறாக்கிப் போட்டு விட்டான். தேவன் சுகமாக்குகிறவராக இருக்கிறார். நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். நாம் அவருடைய குமாரர்களும், குமாரத்திகளுமாயிருந்து, நம்முடைய பிதாவானவர் விசுவாசித்தது போல நாமும் விசுவாசிக்க வேண்டும். இந்தச் சிறிய உயிரணுவைக் கவனியுங்கள், அது நொறுக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய உடைந்து போன அந்த அணுவுக்குள் ஜீவன் வருகிறது. அந்த உயிர் அணு பின்வாங்கிப் போகிறது. “அது அப்படித்தான்” என்று கூறுவதற்கு பாப்டிஸ்டு காரர்களுக்கு அது ஒரு பெரிய வார்த்தையாகும், இல்லையா? ஆனால், எப்படியும் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். அது பின்வாங்குதலாக இருக்கிறது. அங்கே பிசாசு ஒரு கிருமியை வைக்கிறான், அதுவே புற்று நோய் என்றும், கட்டி என்றும் வேறு என்னவெல்லாமாகவும் அழைக்கப்படுகிறது. அவை கள் அணுக்களை வளரச் செய்கிறது. அவன் உங்கள் இரத்தத்தை உறிஞ்ச ஆரம்பிக்கிறான். அவன் அதைத் தான் செய்கி றான். உங்கள் இரத்தத்தை இழுப்பதின் மூலமாக அவன் உங்களைத் தின்கிறான். இப்போது மருத்துவர் என்ன செய்கிறார்? மருத்துவர் அதை அறுத்து எடுத்து விடுகிறார். அங்கே ஒரு சிறு துளி மீதியாயிருக்குமானால், அது தொடர்ந்து ஜீவிக்கும். இப்போது, தெய்வீக சுகமளித்தல் என்பது, அந்த வளர்ச்சியை எடுத்துப் போடுவதில் அவ்வளவாய் செயல்படுவ தில்லை. தெய்வீக சுகமளித்தல் நமக்குள் இருக்கிற பிசாசுடன், அந்தக் கிருமியுடன், அந்த ஜீவனுடன் தொடர்பு கொள்கிறது. ஜீவனே சுகமாக்குகிறது, 57-0611, பத்தி எண் E-35 முதல் E-36 வரை மருத்துவராகிய இயேசு மருத்துவரிடத்தில் உங்களுக்கு நம்பிக்கையுண்டு. நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்கிற விருப்பத்தை அவர் தீர்மானிப்பதில்லை, அல்லது நீங்கள் போக வேண்டும், அவர் மருந்தை பயன்படுத்தும் முறையை எழுதி, ஒரு பை நிறைய உங்களுக்கு மாத்திரைகளைக் கொடுப்பார். அவை களை நீங்கள் விழுங்குவீர்கள், அந்த மாத்திரைகளுக்குள் என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் உங்களு டைய மருத்துவரிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தேவனைக் குறித்த காரியம் என்ன? அவர் கொடுக் கிற சில "நற்செய்தி" என்னும் மாத்திரைகளை (gos-pills) விழுங்குவதற்குப் பயப்படுகிறீர்கள். “அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள். விசுவாசமே ஜெயம், அது உலகத்தை மேற்கொள்ளுகிறது." அவைகளை விழுங்கி என்ன நடக்கிறது என்று பாருங்கள். அது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது; அவர் கொடுக்கிற மருந்துகளை எடுத்துக் கொண்டு, உங்கள் மருத்துவ ரிடத்தில் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்பியுங்கள், அது என்னவென்று உங்களுக்குத் தெரியாது. ஒரு அறுவை சிகிச்சைக்கு உங்களை ஒப்புக் கொடுத்து, உங்கள் மருத்துவரிடத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காண் பிக்கிறீர்கள். அந்த மருத்துவர் மேல் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது நிரூபிக்கிறது. ஆனால் அது கிறிஸ்து விடத்தில் வரும்போது, அவருடைய வார்த்தையில் அவரை எடுப்பதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். இது எப்படியிருக்கிறது? விசுவாசமே ஜெயம். இன்று இரவில் உங்களுடைய பிரச்சனையை இயேசு கிறிஸ்துவினிடத்தில் சமர்ப்பியுங்கள், மருத்துவரிடத்தில் உங்கள் பிரச்சினையை சமர்பிப்பது போல. கர்த்தாவே, நீர் விரும்புகிற எதையும் எனக்குக் கொடும்; இந்த வியாதியில், (பிரச்சினையில்) நீரே மருத்துவர். அப்போது நீங்கள் ஜெயத்தைப் பெற்று விட்டீர்கள். பின்னர் எல்லாவற்யையும் மேற்கொள்ளும் விசுவாசத்தைப் பெறுகிறீர்கள். விசுவாசமே நம்முடைய ஜெயம், 58-1004, பத்தி எண் E-33முதல் E-34 விடாமுயற்சி யோவான், “அவர் தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுக்கிறேன் (ஆமென்) ஏனென்றால் புறா இறங்கி வருவதை நான் பார்த்தேன்” என்று சொன்னான். அவரைத் தவிர வேறு ஒருவரும் அதைப் பார்க்க வில்லை. அதைப் பார்க்க வேண்டும் என்று யாரும் அங்கில்லை. ஆனால், யோவான் அதைப் பார்க்க வேண்டும் என்றிருந்தான்; யோவான் அதைப் பார்த்தான். அவர்களுடைய சுகமளித்தலை எத்தனை பேர் இழந்து போகப் போகிறார்கள் என்று நான் கவலைப்படவில்லை; அந்த சுகத்திற்குரியவர்கள் நீங்கள் என்று விசுவாசியுங்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஜோன்ஸ் என்ன செய்தார் என்று நான் கவலைப்படவில்லை, அல்லது அவர்களில் மற்றவர்கள் என்ன செய்தனர் என்று கவலைப்படவில்லை. நீங்கள் அதைப் பற்றிக் கொள்ளுங்கள், அவருடைய குமாரன் உன் பாவத்திலிருந்தும், வியாதியிலிருந்தும் விடுதலை கொடுத்து விட்டார் என்று தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்தும் போது, தடைகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அதைப் பற்றிக் கொள்ளுங்கள். விடா முயற்சியுடன் இருங்கள். விடாமுற்சி, 62-0719 E, பத்தி எண் E-53 லூக்கா 24:49, "என் பிதா வாக்குத்தத்தம் பண்ணி னதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்” என்று கூறுகிறது. எவ்வளவு காலம் வரைக்கும்? ஒரு மணி நேரமா, இரண்டு மணி நேரமா, பத்து நாட்களா, நான்கு மாதங்களா, ஆறு மாதங்களா, அது வரைக்கும் அது ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. எவ்வளவு காலம்? அதுவரைக்கும். நீங்கள் எதற்காகவும் தேவனிடம் கேட்டுக் கொள்ளும் போது, அதுவரைக்கும் அங் கேயே தரித்திருங்கள். ஆமென். வ்யூ, நான் நான் நன்மை யானதை உணர்கிறேன். அதுவரைக்கும் தரித்திருங்கள். எது வரைக்கும்? அது சம்பவிப்பது வரைக்கும். அதை உரிமை பாராட் டுங்கள். அதை விசுவாசியுங்கள். அதைப் பற்றிக் கொள்ளுங்கள். செயல்படுத்துவதில் முனைப்பாய் இருங்கள். அதைக் குறித்து சாட்சி பகருங்கள். பயப்படாதிருங்கள். செயல்படுத்தலில் செல்லுங்கள். அவர்கள் மேலறையில் என்ன செய்து கொண்டிருந் தார்கள்? துதித்துக் கொண்டும் தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டும் இருந்தார்கள். எதற்காக அப்படி செய்தார்கள்? வாக்குத்தத்தம்; அது வர வேண்டும் என்பதை அறிந்திருந்தார் கள். அங்கே தான் நீங்களும் இருக்கிறீர்கள்; செயல்படுத்துங்கள். வாக்குத்தத்தம் நிறைவேறுமட்டும் தேவனைத் துதித்துக் கொண்டு இருங்கள். நீங்கள் வாக்குத்தத்தத்தைப் பெற்றுள்ளீர்கள். தேவன் சுகமாக்குகிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர் கள் என்றால், செயல்படுத்துவதில் தரித்திருங்கள். இப்போது அவர் உங்களை அழைக்கப்போகிறார் என்று விசுவாசிப்பீர்கள் என்றால், அவரைப் பற்றிக் கொள்ளுங்கள், செயலில் தரித்திருங்கள். ஆமென். செயலில் தரித்திருங்கள். நீங்கள் இரண்டு இறக்கைகளைப் பெற்றுள்ளீர்கள், எனவே அவைகளைப் பயன்படுத்துங்கள். செயலில் தரித்திருங்கள். அவைகளை முன்னும் பின்னுமாக அசையுங்கள். “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்; கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்.” “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று நீங்கள் சத்தமிட வேண்டியதில்லை, "கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். செயலில் தரித்திருங்கள். வேறொருவரால் விளையும் பாதிப்பு, 62-1013, பத்தி எண் 152-154 செயல்படுத்துகிறவராய் தேவன் இருக்கிறார் கர்த்தராகிய இயேசுவே, தாழ்மையின் வழியிலும், தாழ்மையின் தன்மை என்ற வழியிலும், முழங்கால்படியிட்டு இருக்கிற இந்த சபைக் கூட்டத்தாரை உம்மிடத்தில் சமர்ப் பிக்கிறேன். அவர்களை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன், ஏனென் றால், அழைப்பு விடுத்த போது, அதற்குப் பதில் அளிக்கத் தக்கதாக அவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் ஆழமான வைகளைத் தேடுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் முற்றுமாகக் கழுவி விட்டது என்றும், அதற்கு மேலும் ஒன்று மில்லையென்றும் அவர்கள் கேள்விப்பட்ட பிறகு, அவர்கள் அதிகமாக ஜீவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய முழு வார்த்தையும் அவர்களுக்குள் தங்கி விட்டிருக்கிறது; அவர்களுடைய சொந்த சத்தமே கட்டளையாகும் போது, அங்கே சிருஷ்டிப்பின் வல்லமை இருக்கிறது, ஏனென்றால் அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். இந்த பரிசுத்த ஆவியானவர் தான் ஒரு சிருஷ்டிகராயிருக்கிறார். அவர் காரியங்களை நிறைவேற்றுகிறார். ஏனென்றால் அவர் வார்த்தை யைப் பேசுகிறார். உரைக்கப்பட்ட வார்த்தை தேவனைச் செயலில் கொண்டு வருகிறது. தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார், 63-0412 E, பத்தி எண் 327 ஓ, நாம் அதை மட்டும் பார்ப்போமானால்! பாருங்கள்? இந்தக் காரியங்கள் உங்களில் ஒட்டிக்கொள்வது போல் காணப் படும்போது, உங்களை நிலைகுலையச் செய்யும்போது, அவைகள் தான் சோதனையாகும் என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். நிற்கும்படி செய்கிற காரியங்கள் அவைகள் தாம். உங்களுடைய கண்ணா டியை தேவனுடைய வார்த்தையின் பக்கமாய்த் திருப்புங்கள். வார்த்தையைப் பேசுங்கள், பின் முன்னேறிச் செல்லுங்கள். அங்கே செய்ய வேண்டுவதெல்லாம் அவ்வளவே. நமக்கு ஒரு நேரம் வரும், அப்போது, நாம், "தேவனே, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அதற்கு விரோத மாக இருக்கிறேன்" என்று சொல்லுகிறோம். "கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்" என்று வார்த்தை யைப் பேசுங்கள். முன்னேறி நடந்து செல்லத் தொடங்குங்கள். தேவன் சமுத்திரத்தை திறப்பவராக இருக்கிறார். நீங்கள் நடந்து கொண்டே இருங்கள். பாருங்கள்? வெற்றியின் நாள், 63-0421, பத்தி எண் 150-152 ஆவிக்குள்ளாதல் தேவன் இசை மூலமாக சுகமளிக்கிறார். தேவன் அன்பினால் அன்பினால் சுகமளிக்கிறார். பாருங்கள்? மருந்துகளின் மூலமாக தேவன் சுகமளிக்கிறார். ஜெபத்தின் மூலமாக தேவன் சுகமளிக்கிறார். சுகமாக்குவதற்கு தேவன் அநேக வழிகளை வைத்துள்ளார். அதில் எவ்வகையானது உங்களுக்குத் தேவையோ அதைப் பொறுத்தது. சில நேரங்களில் ஒரு சிறிய அன்பு, வெளியே நீட்டப்படுகிறது, அது ஒரு பழைய புண்ணை சுகப்படுத்துகிறது, அது மன வெறுப்படையச் செய்யும் அல்லது வேறு ஏதோ ஒன்று அப்படியான ஒரு பழைய இடம். கொஞ்சம் அன்பைக் காட்டினால் போதும், சிறிய அளவு அக்கறை எடுத்தால் போதும், அது அங்கேயே சுகமாகிறது. சில நேரங்களில் எல்லாமும் தளர்ச்சி அடைந்த நிலையை உணரும்போது, தெருவில் பேசிக் கொள்வது போல, எல்லாமும் சோர்வுற்றிருக்கும்போது என்று நாம் அழைப்பது போல, பாருங்கள், அந்த ஒலிநாடாவைப் போடுங்கள், அந்த இசை அல் லது ஒலித்தட்டை இசைக்கச் செய்யுங்கள். முதலாவது காரியம் என்ன தெரியுமா? உங்கள் காலையோ அல்லது உங்கள் கையையோ அடிக்க ஆரம்பிப்பீர்கள், அப்போது எல்லாம் முடிந்து போயிருக்கும். நீங்கள் எழுந்து மறுபடியும் செல்ல ஆயத்தமாவீர்கள். கவனி, 63-0428, பத்தி எண் 6-9 ஒருவேளை உங்களுக்கு சுகமாகுதல் தேவைப்படும். வார்த்தை என்ன செய்யச் சொல்கிறது? நல்லது, நாம், அதை எண்ணிலடங்கா முறை வாசித்திருக்கிறோம், ஆனால் அதை வாசிக்கும் போது நாம் ஆவிக்குள்ளாகவில்லை. அதனுடைய உண்மையான சத்தியத்தை அவருடைய ஆவியானவர் நமக்குப் போதிக்கும்படிக்கு நாம் தேவனைக் கேட்டோமா? அவ்வாறு நாம் கேட்டிருந்தால், நாம் மூப்பர்களை அழைப்போம், நம்முடைய பாவங்களை அறிக்கை செய்வோம், எண்ணெய் வைத்து, நமக் காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டிருக்கும், அது அவ்விதமாகத் தான் இருக்க வேண்டும். அது உடனடியாக வராது. ஆனால் அவரு டைய ஆவியினால், அப்போது எல்லாம் முடிந்திருக்கும். மேல் முறையீடு செய்வதற்கு வேறு நீதிமன்றம் கிடையாது. தேவன் அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவார். ஒ, நாம் ஆவிக்குள் ளாக வேண்டியது அவசியமாயிருக்கிறது, பின்பு காரியங்கள் செய்து முடிக்கப்படும். முதலிலேயே கிரியைகள் மூலமாகச் செல்லாதீர்கள். ஆவிக்குள்ளாகுங்கள், பிறகு கிரியை செய்யுங்கள், தேவன் என்ன செய்கிறார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். பத்மு தீவு தரிசனம் - சபைக்கால புஸ்தகம் அறிந்து தேவன் அவனோடு கூட இருக்கிறார் என்று உத்தேசமாய்க் கருதிக்கொண்டு, மோசே ஒருபோதும் எகிப்திற்குச் செல்லவில்லை; தேவன் அவனோடு இருக்கிறார் என்பதை அறிந்தவனாக அவன் அவன் எகிப்திற்குச் சென்றான். பாருங்கள்? தேவன் அதைச் செய்வார் என்று எண்ணிக்கொண்டு, உங்களுடைய சுகத்தை நீங்கள் எற்றுக் கொள்வதில்லை. உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், ஏனென்றால் தேவன் அதை ஏற்கனவே செய்து முடித்து விட்டார். அதை அவர் வாக்குப் பண்ணியுள்ளார், உங்களுடைய விசுவாசமும் அதை அப்படியே கூறுகிறது, அதை எதுவும் துடைத்துப் போட முடியாது. விடாமுயற்சி, 63-0802, பத்தி எண் 103 வாக்குத்தத்தமான வார்த்தையை, அந்த வார்த்தையைக் கேட்பதன் மூலம் விசுவாசம் உண்டாகிறது. ஒரு வாக்குத்தத்தத்தை நீங்கள் பெற்றிருக்காவிட்டால், அப்படியானால் உங்களுடைய சொந்த விசுவாசத்தில் முயற்சிக்கிறீர்கள் என்று பொருள். ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தத்தை எடுத்துக் கொள்வீர்களானால், அதை தேவன் உங்களுக்கு வாக்களித்துள்ளார். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீ அப்படிப்பட்ட வாக்குத்தத்தம் எதுவும் பெற்றிருக்கவில்லை. ஒரு வாக்குத்தத்தமும் இன்றி, அவளுடைய சுகத்தைப் பெற்றுக் கொண்டாள், ஆனால் அது அவளுடைய விசுவாசமே. இப்போது, அவளுடைய விசுவாசத்தினால், அவளுடைய சுகத்தைப் பெற்றுக் கொண்டாளானால், அவள் என்ன செய்தாளோ, அதில் ஒரு வாக்குத்தத்தமும் இல்லை, அப்படியானால் நாம் எவ்வளவுக்கதிகமாய் நம்முடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும், ஒரு வாக்குத்தத்தத்தில் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலமாக, தேவன் வெளிப்பட்டு நமக்கு முன்பாக அதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார், அவருடைய வார்த்தையின் மூலமாக அதை நமக்கு நிறைவேற்றுகிறார், சுற்றி வந்து அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துகிறார்! ஒருபோதும் தோல்வியடையாத அவருடைய வாக்குத்தத்தம், 64-0120, பத்தி எண் 17 வாங்கப்பட்ட வல்லமை தேவன் அவருடைய வார்த்தையைக் காக்கப்போகிறார் என்னும் விசுவாசத்தை நான் பெற்றிருக்கும் போது, இப்போதைக்கு நான் சுகமாக்கப்படவில்லை எனினும், தேவன் ஏராளமான சுகமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளார் என்பதை நான் அறிந்திருக்கிறேன், அதை எனக்கு கொண்டு வர நான் விசுவாசத்தைப் பெற்றுள்ளேன். அந்த விசுவாசத்தோடு நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், அது, “நீ சுகமடையப் போகி றாய்” என்று கூறுகிறது, அந்த நிமிஷமே பூரண சுகத்தை அடைந் திருப்பாய். அது ஒரு வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவதில்லை, ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே அதைச் சுதந்தரித்து விட்டீர்கள். விசுவாசம் என்பது ஒரு பொருளாகும், அது ஒரு பாவனை விசுவாசம் அல்ல. ஆனால் பற்றிக் கொள்கிறீர்கள், உங்களுடைய கையில் அல்ல, ஆனால் உங்கள் இருதயத்தில் அதை சுதந்தரமாகப் பெற்றுள்ளீர்கள், உங்களுடைய சுகத்திற்காக வாங்கப்பட்ட வல்லமையைக் கொண்டுள்ளீர்கள். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், 58-0105, பத்தி எண் E-10 ஆகவே நான், "நிச்சயமாகவே லாசரு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டான், அவன் மறுபடியும் மரித்தான், ஆனால், தெய்வீக சுகமளித்தல் என்பது நன்மையான ஈவுகளில் ஒன்று, கிறிஸ்தவர்களாய் இருப்பதினால் அதை அனுபவிக்கிறோம்” என்றேன். தாவீது, “அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே, அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்” என்று சொன்னான். நாம் விசுவாசிகளாய் இருப்பதினால், இந்த உபகாரங்களையெல்லாம் நாம் தேவனிடத்திலிருந்து பெறுகிறோம். சாட்சிகள், 56-1004, பத்தி எண் E-19 தேவனுடைய நியாயப்பிரமாணங்கள் இன்றிரவில் நீங்கள் வெளியே இங்கே மைதானத்தில் இருப்பீர்களேயானால், வழக்கம் போல மிகவும் இருளாயிருக்கிறது, நீங்கள், "நான் ஒரு விஞ்ஞானி, இந்தக் காற்றில் போதுமான மின்சாரம் இந்த மைதானத்தை வெளிச்சமாக்கும் அளவிற்கு இருக்கிறது, இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று வழி காட்டு. ஓ, மகத்தான மின்சாரமே, நீ இங்கே இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். விஞ்ஞான ஆராய்ச்சி, சரியாக இங்கே இந்த காற்றில் இருக்கிறாய் என்று காண்பிக்கிறது. குளிர் காற்றையும், வெப்பக் காற்றையும் தனித்தனியாகப் பிரியுங்கள் அதை ஒன்று சேருங்கள், உங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்) இப்போது வெளிச்சத்தைப் பாய்ச்சி வழியை உண்டுபண்ணு, நான் இழக்கப்பட்டவனாக இருக்கிறேன்” என்று சொல்லக் கூடும். தொண்டை கரகரப்பாவது மட்டும் நீங்கள் சத்தமிடலாம், அது ஒருபோதும் வெளிச்சத்தை உண்டுபண்ணாது, ஆனால் நீங்கள் மின்சார விதிமுறைப்படி கிரியை செய்தால், பாதைக்கு வெளிச்சத்தை உண்டுபண்ணும். பாருங்கள்? இப்போது, தேவனைக் குறித்த வழியும் அதுதான். அநேக நேரங்களில் தெய்வீக சுகமளித்தல் என்பது தவறாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. (பாருங்கள்?), ஆனால் ஒரு வழியுண்டு. உண்மையாகவே தெய்வீக சுகமளித்தல் உ உண்டு, ஆனால் தெய்வீக சுகமளித்தலைப் பெற்றுக் கொள்வதற்கு, தேவனுடைய பிரமாணங்களின்படியும், கட்டளைகள் படியும் நாம் கிரியை செய்ய வேண்டும். அது அங்கே இருக்கிறது. தேவனோடு கலந்துரையாடல், 60-0108, பத்தி எண் E-6 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைபடுத்துகிறவர்களாயிருக்கிறோம். (2 கொரி. 10:5) தேவன் மட்டுமே இப்போது, சுகமாக்குதல் என்பது தேவனுக்கு மட்டுமே உரியது. நம்முடைய சுகத்தை தேவன் ஒருவரே கிரயம் செலுத்தி வாங்கினார். நம்மால் என்னவெல்லாம் செய்யக்கூடுமோ அது நம்மைப் பொறுத்தது, நம்முடைய ஜீவியத்தில், தேவன் நமக்கு அருளிய எல்லா வழிகளிலும், நம்முடைய சுகத்திற்காக, ஆனால் அது சுகமாக்குகிற தேவனே. தேவன் உங்களை (பரம்) வீட்டுக்குச் செல்ல அழைப்பாரென்றால், இன்றிரவில், இங்கே உங்களைப் பிடித்து வைப்பதற்கு, இந்த உலகத்தில் போதுமான மருந்துகள் இல்லை. உங்களை இங்கே பிடித்து வைப்பதற்கு ஒன்றுமே இருக்கப்போவதில்லை. அவர் நீங்கள் பூமியில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தால், இன்றிரவில் நீ மரித்து விடுவாய் என்று எத்தனை மருத்துவர்கள் கூறினாலும், நீங்கள் மரிக்கப்போவதில்லை. ஆகவே எலலாமுமே தேவனைச் சார்ந் துள்ளது. ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம், 64-0304, பத்தி எண் 11 தேவனே சுகமாக்குகிறவர். ஒருமனிதனும் சுகமாக்கு கிறவன் அல்ல; தேவனே சுகமாக்குகிறவர். இந்த வரங்கள் எல்லாம் ஜனங்கள் மேலுள்ள தேவனுடைய மனப்பான்மையைக் காட்டுவதற்காகவே, ஜனங்களாகிய உங்களை மறுபடியும் தேவனை விசுவாசிக்க செய்வதற்காக. ஏனென்றால், உங்கள் வியாதிப்பட்ட சரீரத்திற்காக, நீங்கள் போதுமான விசுவாசம் கொண்டிருக்காவிட்டால், எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான போதுமான விசுவாசத்தை எப்படி பெறப் போகிறீர்கள்? பாருங் கள்? மோசே, 50-0110, பத்தி எண் E-46 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். (ரோமர் 8:18) முழுமையாக செலுத்தப்பட்டாயிற்று என்னுடைய பயணச்சீட்டை நீங்கள் வாங்கினால்... ஆராதனை முடிந்த சற்று நேரத்திற்கெல்லாம், நான் வீட்டிற்கு காரோட்டிச் செல்ல தீர்மானித்து விட்டேன், ஆகவே என்னுடைய மனைவியையும், பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு செவ்வாய்க் கிழமை சீயோனில் இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது,... அது அறுநூறு அல்லது எழுநூறு மைல் தூர பிரயாணமாகும், வேகமாகச் செல்ல வேண்டும். இப்போது, நீங்கள், “சகோதரன் பிரன்ஹாமே, நான் உங்களுக்காக விமான பயணச் சீட்டு வாங்கி விட்டேன், அது இங்கிருக்கிறது. நீங்கள் காரில் சென்று,... பின்னர் விமானத்தில் செல்லுங்கள்” என்று கூறலாம். நல்லது, நான் ஒருபோதும் போகவில்லையென்றால்... உங்கள் பணத்தை எடுத்து, விமானப் பயணச் சீட்டை வாங்கியுள் ளீர்கள், அப்படியிருந்தும், "அது இங்கே இருக்கிறது. உங்கள் இங்கே இருக்கிறது, நீங்களும் ஆயத்தமாயுள்ளீர்கள் என்று விமான சேவை என்ன கூறினாலும், அது எனக்கு ஒருபோதும் ஒரு நன்மையும் செய்யாது." நான் அந்தப் பயணச் சீட்டை ஏற்றுக் கொள்வது வரைக்கும், அது எனக்கு ஒரு நன்மையும் செய்யாது. அது சரியா? நீங்கள் எவ்வளவு உத்தமமாக இருந்தாலும் சரி, அப்படியிருந்தும் அது எனக்கு நன்மை பயக்காது – அதை நான் ஏற்றுக் கொள்வது வரைக்கும். இப்போது, உங்களுடைய சுகமாக்குதலும் விமானப் பயணச்சீட்டைப் போல நிறைவுபெற்றதாயிருக்கிறது, அதைக் காட்டிலும் மேலாக என்ன இருக்கிறது... அதற்கான கிரயத்தை நீங்கள் செலுத்தியிருந்தால், விமானப் பயணச்சீட்டு முழுமை பெற்றிருப்பதைக் காட்டிலும் உங்களுடைய சுகமாகுதல் அதிகமாக முழுமை பெற்று விட்டது. அது சரியா? இயேசு மரித்த போது, பாவத்தைக் குறித்த கேள்வியைத் தீர்த்து விட்டார். அங்கே உங்கள் வியாதிக்காகவும் அவர் அவர் பரிகாரம் செலுத்தி விட்டார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்; அவருடைய தழும்புகளால் குணமானோம்." உங்களுக்கு இதை அறிக்கை செய்வதில் அவ்வளவு தெளிவுள்ளவனாய் இருப்பதை நான் அறிவேன். எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?, 52-0720 E, பத்தி எண் E-14 ஒப்புக்கொடுத்தல் கவனியுங்கள், நாம் நினைவுகூருவோமாக, அவர் நம்மு டைய சரீரத்தையும் சிருஷ்டித்தார். அப்படியானால் நம்முடைய சரீரம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டாமா? ஆமென். உங்களு டைய எண்ணங்களை அவரிடத்தில் சமர்ப்பியுங்கள், உங்கள் ஜீவியத்தை அவரிடத்தில் சமர்ப்பியுங்கள், உங்களுடைய விசுவா சத்தை அவரிடத்தில் சமர்ப்பியுங்கள், அப்பொழுது அவர் சொல்லு வதற்கெல்லாம் அந்த சரீரம் கீழ்ப்படிவதைக் கவனியுங்கள். நீ ஒரு குடிகாரனாக இருந்தால், உன்னால் குடியை விட முடிய வில்லையென்றால், அந்த ஜீவியத்தை அவரிடத்தில் ஒப்புக்கொடு, கவனி, நீ ஒருபோதும் குடிக்க மாட்டாய். நீ ஒரு வழக்கமாக புகைபிடிப்பவனாக இருந்தால், அதை விடுவதற்கு முயற்சி செய்து, அதை விட முடியவில்லையென்றால், அதை அவரிடத்தில் ஒப்புக் கொடு, என்ன நடக்கிறது என்று கவனி. அவர் அந்தச் சரீரத்தை வார்த்தைக்குக் கீழ் கொண்டு வருவார். ஆம், ஐயா. ஆனால், அதை நீ அவரிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும். நீ அவரை விசுவாசிக்க வேண்டும். அவரே நம்முடைய சரீரத்தைச் சிருஷ்டித்தவர்; அவைகளும் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியும். நீ அதை விசுவாசிக்கிறாயா? (சபையார், “ஆமென்” என்கின் றனர் - ஆசிரியர்.) நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் நீங்களும் அதைத் தான் செய்ய வேண்டும். இயேசுவைக் காட்சியில் அழைத்தல், 63-0804 E, பத்தி எண் 101 கவனியுங்கள், தேவன் நம்முடைய சரீரத்தை அவருக்கு அவ்வளவாய் கீழ்ப்படியச் செய்வார், பரி. யோவான் 6-வது அதிகாரத்தில், அவர், "என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத் தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்று சொல்லியிருக்கிறார். அதை எண்ணிப்பாருங்கள், நம்முடைய சரீரத்தை ஒருபோதும் நம்முடைய ஆளுகைக்குள் வைக்கக்கூடாது, அப் போது நம் சரீரம் கீழ்ப்படியும், அது ஒரு ஒரு கரண்டியளவுள்ள சாம்பலாய் மாறப் போகிறது, தேவன் அந்தச் சரீரத்தோடு பேசுவார், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவுக்கொப்பாய் அது மறுபடியும் எழுந்திருக்கும். இதைக் குறித்து கவலை கொள்வ தென்ன? அது தேவனுடைய கரங்களில் இருக்குமானால், ஆமென் என்று கூறிக்கொண்டே செல்லுங்கள், ஏனென்றால் தேவன் அதைக் கடைசி நாளில் எழுப்புவார். அதைச் செய்வதாக வாக்களித்துள்ளார், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அவருடைய வார்த்தையில் அது எழுதப்பட்டுள்ளது. அப்படி யானால் இதைக் குறித்து ஏன் பயப்படுகிறாய்? இந்தச் சிறிய பழைய கப்பல்? அதில் தேவன் இருக்கிறார். அவர் அதில் இல்லையென்றால், இன்றிரவில் அவர் உள்ளே வருமட்டும் இங்கிருந்து கடந்து சென்று விடாதீர்கள். அவரில்லாமல் கப்பல் யாத்திரை செய்வது ஆபத்தானதாகும். நிச்சயமாக நீ மூழ்கி விடுவாய். இயேசுவை காட்சியில் அழைத்தல், 63-0804 E,பத்தி எண் 105-106 அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். (1 பேதுரு 1:7) ஒளியில் நடவுங்கள் வெளிச்சம் இங்கிருக்குமட்டும், இருள் இந்த அறைக் குள் வரமுடியாது. வெளியில் அது எவ்வளவு இருளாக இருந் தாலும் சரி. அது ஒருபோதும் மிகவும் இருளடையாது, ஏனென் றால் இந்த வெளிச்சமானது இருளை மேற்கொள்கிறது. அது சரியா? இருளானது எவ்வளவுக்கதிகமாய் ஜன்னல் வழியாக உள்ளே பிரவேசிப்பதற்கு அழுத்தம் கொடுத்து முயற்சிக்கிறதோ, அங்கு வெளிச்சம் இருக்குமட்டும், இருளை விட, வெளிச்சமே அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. விசுவாசம் உள்ளே வரும்போது, எவ்வளவு அவிசுவாசம் சுற்றிலும் இருந்தாலும், வெளிச்சமானது இருளை விட மகத்தானது. தேவனால் அருளப்பட்ட வழி, 53-0513, பத்தி எண் E-14 ஆனால், நாம் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. விசுவாசத்தைக் கொண்டு நாம் நம்புகிறோம், அதன்படி நடக்கிறோம். தேவன் அவருடைய திட்டங்கள் அனைத்தையும் நமக்குச் சொல்ல வேண்டுவதில்லை. காலையில் எவ் வாறு அவர் விடியற்கால நட்சத்திரத்தை பிரகாசிப்பிக்கப் போகிறார், என்பதைப் போல... எப்படியும் முன்னேறிச் செல்லுங்கள். தேவன் அவருக்குச் சொந்தமானவர்களைப் பொறுப்பெடுக்கிறார். நீங்கள் வியாதிப்பட்டவராயிருந்து, உங்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டபோது, எப்படி அந்த புற்று நோயை அகற்றப் போகிறார் என்று கவலை கொள்ள வேண்டியதில்லை, அந்த முடமான காலை எவ்வாறு நிமிர்த்தப்போகிறார் என்று கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. விசுவாசத்தோடு முன் னேறிச் செல்லுங்கள், அதைப் பொறுப்பெடுத்துக் கொள்வது தேவனுடைய காரியமாகும். அவருடைய அதிசயங்கள் நிறைவேற்றப்படுவதற்கு,58-0112 A, பத்தி எண் E-13 தேவனுடைய அதிகாரி தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். அவிசுவாசம் கொள்ளாதிருங்கள். அமெரிக்காவில், "பந்தயத்திற்குத் தயாராகக் கோட்டில் விரல் வைத்து நில்” என்று நமக்கு பழமொழி உண்டு. சாத்தானை அவனுடைய சொந்த இடத்தில் சந்தியுங்கள்; அவ னைத் துரத்தி விடுங்கள். இன்றிரவில் நீங்கள் வீட்டிற்கு உங்களுடைய சொந்த வீட்டிற்குச் சென்றால் என்ன நடக்கும், உங்கள் வீட்டில் அநேக மோசமான ஜனங்கள் இருப்பார்கள், மேஜை, நாற்காலி போன்றவற்றை கிழித்துப் போட்டு, உங்கள் வீட்டை குப்பைக் காடாய் ஆக்கியிருப்பார்கள், குடித்துக் கொண்டு அங்குமிங்கும் போகிறவர்களாக இருப்பார்கள், அப்படித் தானே? நீங்கள் கதவைத் திறப்பீர்கள்; “இங்கே என்ன செய்கி றீர்கள்?” என்று கூறுவீர்கள். அவர்கள், "இந்த வீடு மனித இனத்திற்காகக் கட்டப்பட்டது. நான் ஒரு மனிதனாக இருக்கிறேன்; இங்கே எனக்கு உரிமையுண்டு" என்று கூறுவார்கள். அதற்கு நீங்கள், "ஒரு நிமிஷம் பொறுங்கள், இது என்னுடைய சொத்து" என்று கூறுவீர்கள். உங்களால் அதை நிரூபிக்க முடியும். அங்கு சென்று, உங்களுடைய உரிமை பத்திரத்தை எடுத்து, உங்களால் அதை நிரூபிக்க முடியும், பிறகு, அந்த உரிமை பத்திரத்தைக் காட்டுவீர்கள். அவர்கள் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும். அவ்வாறு அவர்கள் அகல வில்லையென்றால், அதிகாரிகள் வந்து அவர்களை புறம்பே தள்ளுவார்கள். கவனியுங்கள், சாத்தான் அந்த அசுத்தத்தை உங்களுக்குச் செய்கிறான். அவன்தான் உங்களுக்கு புற்று நோயைக் கொடுத்தான், இருதயக் கோளாறு, இந்த எல்லா வியாதிகளையும் கொடுத்தவன் அவனே. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனிடத்தி லிருந்து ஒரு எழுதப்பட்ட உரிமைப்பத்திரத்தை பெற்றுள்ளீர்கள்; அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானோம். சுகமாகுதல் என்பது உங்களுடைய தனிப்பட்ட சொத்து. அதை விட்டு பிசாசு உங்களை ஏமாற்றி விட அனுமதிக்காதீர்கள்...?... விசுவாசம் கேள்வியினால் வருகிறது; கேள்வி வார்த்தையினால் வருகிறது. பரிசுத்த ஆவியானவர்... பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய அதிகாரியாயிருக்கிறார். அவர் வந்து அவனை வெளியே துரத்துவார். ஆமென். விசுவாசம் கொள்ளுங்கள். இன்றிரவிலும் அதே இயேசு, 55-0826, பத்தி எண் E-15 சுகமாக்கும் வரம் சுகமாக்கும் வரம் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? சுகமாக்குதலில் இருக்கும் விசுவாசம். பாருங்கள்? உங்கள் விசுவாசத்தை அவிழ்த்து விடுகிறீர்கள், யாரோ ஒருவ ருக்காக ஜெபிப்பதற்காக, அதுதான் சுகமாக்கும் வரம். ஒவ்வொரு ஊழியக்காரரும் அதைப் பெற்றிருக்க வேண்டும், ஒவ்வொரு வரும், பாருங்கள், சுகமாக்கும் வரத்தைப் பெற்றிருக்க வேண்டும். உன்னைச் சுகமாக்குகிற வல்லமை உனக்குள்ளேயே இருக்கிறது, பரிசுத்த ஆவியானவர், அவர் வழியில் கிரியை செய்ய அனும திக்க வேண்டும். அவ்வளவு தான். இயேசுவை நோக்கிப் பார்த்தல், 64-0122, பத்தி எண் 185 காணக்கூடாதது இப்போது, நம்முடைய விசுவாசத்தை இழப்போமே யானால், தேவனிடத்திலிருந்து நாம் ஜெபத்திற்கான எந்தப் பதி லையும் ஒருபோதும் பெற்றுக் கொள்ள மாட்டோம். “ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன், அவர் உண்டென்றும், அவர் தம்மை விடாமுயற்சியுடன் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென் றும் விசுவாசிக்க வேண்டும்." ஆகவே நாம் விசுவாசத்தை இழந்து போனால், நம்முடைய ஜெபம் போய்ச் சேராது; ஒன்றையும் பெற்றுக் கொள்ள மாட்டோம். ஆகவே, இன்று காலையில் நாம் எண்ண வேண்டியது என்னவென்றால், விசுவாசத்தைப் பற்றிக் கொள்வதே. பின்னர், நாம் விசுவாசத்தை இழந்து போனால், நம்முடைய எல்லா நம்பிக்கையும் போய் விடும். நாம் விசுவாசத்தை விட்டு விட்டால், நம்முடைய ஆவிக்குரிய உண்மைப் பொருள் அத்தனையும் போய் விடும். காணக்கூடிய காரியங்களில் நீங்கள் விசுவாசத்தைப் பெற முடியாது. நீங்கள் காணக்கூடிய காரியங்கள் அனைத்தும் அழிவுக்குரியன. ஒரு மகத்தான மனிதனைப் பார்ப்போம் என்றால், அல்லது பெரிய மந்திரியை அல்லது ஒரு பெரிய சபையைப் பார்ப்போம் என்றால், ஒருநாளில் எல்லாமும் அழிந்து போகும். ஒரு மகத்தான தேசத்தை நாம் பார்ப்போ மானால், நம்முடைய மகத்தான ஆயுதங்கள், ஒரு நாளில் அவை கள் எல்லாம் அழிந்து விடும். அப்படியானால் நாம் விசுவாசத் தினால் வாழ வேண்டும், அந்தக் காரியங்களை விஞ்ஞானம் பிரகடனப்படுத்துவதில்லை. விசுவாசத்தினாலே நாம் நம்புகிறோம். விசுவாசத்தினாலே மோசே, 58-0720 M, பத்தி எண் E-16 அடையாளம் இப்படிப்பட்ட சிலவற்றையும், வியாதி போன்றவைகளை யும் சாத்தான் உங்களுக்குக் கொடுக்க முயற்சி செய்வானேயானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அடையாளத்தை மட்டும் காண்பியுங்கள். "நான் விலை கொடுத்து வாங்கப்பட்ட பொருள். என்னுடைய சுகத்திற்கான கிரயம் செலுத்தப்பட்டாயிற்று. நான் தேவனுடைய பொருளாக இருக்கிறேன், ஏனென்றால் பரிசுத்த ஆவியின் அடையாளத்தைக் கொண்டுள்ளேன். இந்த பெரும் பாதைக்கு வெளியே உன்னால் என்னை வைத்திருக்க முடியாது. என்னுடைய சுகத்திற்கு அப்பால் உன்னால் என்னை வைக்க முடியாது. நான் அடையாளத்தை உனக்குக் காண்பிக்கிறேன், என்னுடைய... “அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்." இங்கே இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இருக்கிறது, இப்போது அது எனக்குள் இருக்கிறது, அதை உங்களுக்கு நிரூபிக்கப்போகிறேன்.” ஒ, அங்கே தான் உண்மையான காரியம் இருக்கிறது! அங்கேதான் அடை யாளம் இருக்கிறது. அடையாளம், 64-0208, பத்தி எண் 140 பாருங்கள், சுகமாக்கும் வல்லமை உங்களுக்குள் இருக் கிறது. அது பிரசங்கியாரிடத்திலிருந்து வருவதில்லை. அது வெளிப்பாட்டின் மூலமாக, விசுவாசத்தினால் உங்களிடத்தில் வருகிறது. "வல்லமையினால் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே எல்லாம் கூடும்" என்று கர்த்தர் உரைக்கிறார். “என்னுடைய ஆவி, கிருபையினால், இதை உங்க ளுக்கு வெளிப்படுத்துகிறது.” அதை எதுவும் ஒருபோதும் எடுத் துப்போட முடியாது. விசுவாசத்தினால், வெளிப்பாடு! விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள், 65-1126, பத்தி எண் 177 ஜெபித்துக்கொண்டேயிருங்கள் அநேக நேரங்களில், பீடத்தின் மேலுள்ள ஜனங்களைக் கவனித்துள்ளேன்: மரிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்தவர் களாக இருப்பார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருக் கும். அவர்கள் நீண்ட காலம் வாழப்போகிறவர்கள் அல்ல என்பதை அறிவேன். அவர்களுக்கு, "புறப்பட்டுச் செல்லுங்கள், கர்த்த ராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டவர்களாய் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்று கூறுவேன். இப்போது, ஒருவேளை, அவர் எனக்கு அந்தக் குறிப்பிட்ட நபரைக் காட்டுவார், அந்த மனிதனில் மரணம் இருக்கிறது, அதை என்னால் மேற்கொள்ள முடியாது. ஒருவேளை அந்த மனிதனோடு சற்று நேரம் உட்காருவேனானால், அவர்களோடு பேசுவது, அது நீண்ட நேரம் எடுக்கும், இருபது, முப்பது நிமிடங்கள் எடுக்கும், சில நேரங்களில் ஒரு மணி நேரம் கூட ஆகும், தேவன் தரிசனத்தைக் கொடுக்கு மட்டும் பேசிக் கொண்டே யிருப்பேன், அதன்பின்பு, ஒருவேளை அந்த மனிதனிடத்தில் ஏதோ சொல்லப்படுகிறது, அது அவர்களை ஏதோ ஒன்றிலிருந்து மனந்திரும்பச் செய்யும், அது ஒருவேளை அது அவர்களை தேவனோடு சில பொருத்தனைகளை பண்ணச் செய்யும், அது - அவர்களுக்கு தேவனுடைய தயவைப் பெற்றுத் தரும், அவர்களை சுகமாக்கும், ஏனென்றால், அநேக நேரங்களில் தேவன் ஏதோ ஒன்றை உச்சரிக்கிறார், பின்பு அதன் பேரில் தன் சிந்தனையை மாற்றிக் கொள்ளுகிறார். அதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? ஒரு சமயம் ஒரு தீர்க்கதரிசியினால், அவர் மரிக்கப் போகிறான் என்று ஒரு இராஜாவுக்கு சொல்லப்பட்டது. அதை நினைவில் வைத்துள்ளீர்களா? அந்தத் தீர்க்கதரிசி தன்னுடைய செய்தியைக் கொடுத்த பிறகு, அந்த அறையை விட்டு நடந்து விட்டான், அந்த இராஜா தன்னுடைய முகத்தை சுவர் பக்கமாக திருப்பிக் கொண்டு, மனங்கசந்து அழுதான், “கர்த்தாவே, நான் உம்மிடத்தில் கெஞ்சிக் கேட்கிறேன். சுத்த இருதயத்தோடு உமக்கு முன்பாக நான் நடந்து வந்துள்ளேன்” என்றான். இப் போது, தேவனை மகிமைப்படுத்துவதற்காக, ஒரு பதினைந்து வரு டமோ அதற்கு மேலோ தனக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். தீர்க்கதரிசி அவனுடைய வேலையை செய்து முடித்து விட்டுப் போய் விட்டார், ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அந்தத் தீர்க்கதரிசியின் மேல் வந்தார், அவர் மரிக்கப் போகிறார் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை கூறினபிறகு, “திரும்பிப் போ” என்று கூறினார். மூன்று நாளைக்குள் அவன் படுக்கையிலிருந்து எழுந்திருப்பான் என்றும், தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்டார் என்றும் தீர்க்கதரிசி அவனிடம் கூறினான். ஆகவே ஜெபம் காரியங்களை மாற்றிப்போடுகிறது. அது சரியல்லவா? எனவே ஜெபமானது காரியங்களை மாற்றுகிறது. ஆகவே, ஜனங்களை ஜெபிக்கும்படி நான் கேட்பேன்; ஏனென்றால் அது காரியங்களை மாற்றிப்போடும். கர்த்தருடைய தூதனானவர், 51-0502, பத்தி எண் E-9 ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். (யாக்கோபு 1:6) இருதயத்திலிருந்து ஒரு மனிதன் அவனுடைய சுகத்திற்காக கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது என்ற விசுவாசத்தின் அடிப்படையில் கிறிஸ்துவினிடத்தில் வரும்போது, "அவருடைய தழும்புகளால் குணமானோம்” என்பதை ஏற்றுக் கொள்கிறான், அவன் இரு தயத்தில் ஏதோவொன்று சம்பவிப்பது வரையிலும், “அது அப்படித் தான், நான் சுகமடையப் போகிறேன்” என்று அது சொல்கிறது... நான் உங்களுக்குக் கூறுகிறேன், அவர்களை சுகம் பெறுவதிலிருந்து தடுக்க ஒரு வழியும் இல்லை. அவர்கள் சுகமடையப் போகிறார்கள். அது சரியே. ஒரு மனிதனிடத்தில் அவன் மறுபடியும் பிறந்த பிறகு, பாவத்தை விட்டு விலகு என்று நீங்கள் அவனுக்கு சொல்ல வேண்டியதில்லை. அது தன்னைத் தானே முற்றிலுமாக நிறுத்திக் கொள்கிறது. நல்லது, இதிலும் அதே காரியம் தான். “இப்போது, இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்” என்று நீங்கள் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை... அவர்கள் சுகம் பெற்ற பிறகு, அவர்கள்... அவர்களுக்குள் ஏதோ சம்பவிக்கிறது. அது அவருக்கு வெளியில் நடக்கிற காரியம் அல்ல; அது உள்ளும் புறம்புமாக நடக்கிற காரியம். அது இங்கே முதலாவது நடக்கிறது. நீங்கள் அதை முற்றிலுமாக விசுவாசி யுங்கள். அந்த நேரத்திலிருந்து, அது கிரியை செய்யப் போகிறது. தேவன் ஒரு அருளப்பட்ட வழியை வைத்திருக்கிறார், 56-0108, பத்தி எண் E-7 அதை எவ்வாறு நிரூபிப்பது? அதை நாம் நிரூபிப்பதில்லை; அதை நாம் விசுவாசிக்கிறோம். எதையும் நாம் நிரூபிக்க வேண்டும் என்று கேட்கப்படவில்லை; அதை விசுவாசிக்க வேண்டும் என்றே கேட்கப்பட்டுள்ளோம். விசுவாசத்தினாலே மோசே, 58-0720 M, பத்தி எண் E-22 கடைசியாக தெய்வீக சுகமளித்தல் ஜனங்கள் தாங்கள் விசுவாசம் கொண்டுள்ளதாகவும், தெய்வீக சுகமளித்தலை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை என்றும் எனக்குக் கூறுவார்கள். நண்பர்களே, தெய்வீக சுகமளித் தலை நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் இழக்கப் பட்டு போவீர்கள். அது சரியே. தேவன் இந்தச் சரீரத்தை துண்டு துண்டாக இணைத்த (நோக்கமே) அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்ற போதுமான விசுவாசத்தை உங்களால் கொண்டிருக்க முடியவில்லையென்றால், தேவன் இந்தப் பழைய அழிவுக்குரியதை எடுத்து, அதிலிருந்து அதை அழியாமைக் குள்ளாக்கப் போகிறார் என்பதை எவ்வாறு விசுவா சிக்கப் போகிறீர்கள். அது நேரடியான தெய்வீக சுகமளித்தலாகும். ஓ, என்னே. நியாயத்தீர்ப்பின் நாளில் அந்த உயிர்த்தெழுதலில், பயங்கரமான நாம் எதிர்பார்த்ததற்கு மாறான காரியங்கள் சம்பவிக்கும். அது சரியே. விசுவாசமானது பொருளாகும், 47-0412, பத்தி எண் E-60 இப்போது, தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று இல்லை யென்றால், சரீரத்திற்கு உயிர்த்தெழுதலும் இல்லை. மீட்கப்பட்ட சரீரத்திற்கு தெய்வீக சுகமளித்தல் அச்சாரமாக இருக்கிறது. கர்த்தருடைய தூதனானவர், 51-0718, பத்தி எண் E-7 தேவன் விசுவாசத்தைக் கனப்படுத்துகிறார் உங்களுடைய சபையில் சேர்தலை தேவன் கனப்படுத் துவதில்லை; உங்களுடைய விசுவாசத்தை அவர் எதிர்பார்க்கிறார், அவருக்குள் இருக்கிற உங்களுடைய விசுவாசத்தைக் கனப்படுத் துகிறார். அவர்... சுகம் சுகமாக்கப்படுவதற்கு நீங்கள் ஒரு கிறிஸ்தவனாகக் கூட இருக்க வேண்டுவதில்லை, ஆனால் நீங்கள் சுகத்தில் தரித்திருப்பதற்கு, நீங்கள் கிறிஸ்தவராக மாற வேண்டும். "நீ போ, இனிமேல் பாவம் செய்யாதே, அல்லது இதைக் காட்டிலும் கொடியது உன்மேல் வரும்." ஆகவே நீங்கள்... அநேக நேரங்களில் புருஷர்களும், ஸ்திரீகளும், அவர் கள் எல்லாம் தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அப்படி யிருந்தும் சுகத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், மரத்துப்போன பரிசுத்தவான்கள் ஜெபவரிசையில் வருவதை நான் பார்க்கிறேன், அதே சமயத்தில் சமயத்தில் தெருவில் திரியும் விபச்சார ஸ்திரீகள் ஜெபவரிசையில் வந்து சுகத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அது உங்கள் விசுவாசத்தை சார்ந்திருக்கிறது. தேவன் அவருடைய ஜனங்களுக்குள், 50-0227, பத்தி எண் E-4 இராப்போஜனம் தெய்வீக சுகமளித்தல் என்பது இராப்போஜனத்தில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? இஸ்ரவேல் ஜனங்கள், இராப்போஜனத்திற்குச் சாயலாக அப்பம் புசித்து, நாற்பது வருஷம் யாத்திரை செய்தார்கள்... அவர்கள் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்த போது, அவர்களில் ஒருவனும் பலவீனமாயிருந்த தில்லை: இருபத்தைந்து இலட்சம் பேர்கள். இராப்போஜனத்தில் சுகமாக்கும் வல்லமையுண்டு. பிரதிஷ்டை, 62-1104 E, பத்தி எண் E-27 விசுவாசமே அரசாளுகிறது ஆனால் நீங்கள் நம்பிக்கையில் மட்டும் சார்ந்து கொண்டிருப்பீர்களேயானால், விசுவாசத்திற்கு இடையூறு விளை விக்கிறீர்கள். இப்போது, நம்பிக்கை ஏதோவொன்றை வழியெல் லாம் எதிர்பார்க்கிறது, ஆனால் விசுவாசம் இப்போதே உரிமை கோரும். பாருங்கள்? விசுவாசம், "தேவன் அவ்விதம் கூறி யிருக்கிறார், அது என்னுடையது” என்று கூறும். அத்துடன் அது முடிந்து விட்டது. பாருங்கள்? இன்னும் நான் முடமானவனாக இருக்கிறேன், அதைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை, நான் இன்னும் குருடனாக இருக்கிறேன், நான் இன்னும் வியாதியஸ் தனாக இருந்தால், அது அதனுடன் எதுவும் செய்வதற்கில்லை. நான் எப்படியும் அதை விசுவாசிக்கிறேன். இப்போதே அது என்னுடையதாயிருக்கிறது. தேவன் அவ்விதம் கூறியிருக்கிறார், அத்துடன் அது முடிந்து முடிந்து விட்டது." பாருங்கள்? அதுதான் விசுவாசம். ஆனால் நம்பிக்கை, "தேவன் அவ்விதம் கூறினார், ஒருநாள் அதைப் பெற்றுக் கொள்வதை எதிர்பார்க்கிறேன்" என்று கூறும். நீங்கள் பாருங்கள்? “ஏதோவொரு நாளில் நான் எதிர் பார்க்கிறேன்.” இன்னொரு நாளுக்கென்று சாத்தான் அவ்விதம் பிடித்து வைத்திருப்பானேயானால், அதை அவன் நல்லது என்று கருதுகிறான். அது சரியே. நீ ஒருபோதும் அதை பெற்றுக் கொள்ளமாட்டாய். இப்போதே அதைப் பெற்றுக் கொண்டு விட்டேன் என்று விசுவாசியுங்கள் அது உங்களுடைய சொந்த சொத்தாக இருக்கிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளில் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” அது சரியா? இப்போது விசுவாசம் கிரியை செய்கிறது. அது சாதக மானது. அங்கே... ஓ, என்னே. விசுவாசம் உள்ளே வரும்போது, உங்களுடைய வியாதி, மற்றும் எல்லாவற்றையும் நான் உங்க ளுக்குக் கூறுகிறேன். அது பனிக்கட்டி, சூடான அடுப்பில் விழுவது போலாகும். அது உடனடியாக உருகிப்போகும். விசுவாசத்திலிருந்து எல்லாம் போய்விடும். ஏனென்றால், விசுவாசம் எழுந்து நின்று, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. விசுவாசம் பேசும் போது, ஒவ்வொருவரும் அமைதியாயிருக் கின்றனர். அது சரியே. விசுவாசம் கேள்வியினால் வருகிறது, 54-0320, பத்தி எண் E-29 புறக்கணிக்கப்பட்டாயிற்று இப்போது, தேவன் அவருடைய வழியை உண்டாக்கும் போது, அது அதிசயமாக இருக்கும், நமக்காக, நம்முடைய சுகத்திற்காக, நம்முடைய இரட்சிப்பிற்காக, நம்முடைய ஆறுதலுக் காக, நம்முடைய சமாதானத்திற்காக, இந்த காரியங்கள் அனைத் திற்காகவும், அவர் ஒரு வழியை உண்டுபண்ணும்போது, நாம் அங்கிருந்து கடந்து சென்று அவைகளை விட்டு விடும் போது அவர் எவ்விதமாக உணருகிறார். அது அவரை மிகவும் துக்க மடையச் செய்யும். ஏன்?, 61-0125, பத்தி எண் E-28 விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்! யாவும் கைகூடும்!!